உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் கைவிலங்கிட்டு இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்

அமெரிக்காவில் கைவிலங்கிட்டு இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்

நேவார்க் : அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு, தரையில் மண்டியிட வைத்து, கட்டாயமாக வெளியேற்ற முயன்றது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6xvu746c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தவிர, சமூக வலைதளத்தில், அமெரிக்காவுக்கு எதிராகவும், இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்தும் பதிவிட்டவர்களையும் குறிவைத்து, கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.இந்தாண்டு ஜனவரியில் இருந்து, 1,085 இந்தியர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் பணியாற்றும், அங்குள்ள, எம்.ஐ.டி.,யில் படித்த இன்ஜினியர் குணால் ஜெயின் என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் நேவார்க் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது, அந்த விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவரை, போலீசார் தரையில் மண்டியிட வைத்தனர். அவருடைய கையில் விலங்கும் போடப்பட்டிருந்தது.கண்ணீருடன், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அந்த மாணவர் கதறியது, இதயத்தை கசக்கி பிழிவதாக உள்ளது. அவர் ஹரியானாவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியராக, எந்த உதவியையும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலையில் இருந்தேன்.இதுபோன்று, மனிதநேயம் இல்லாமல், இந்திய மாணவர்கள், கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக தெரிகிறது. அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பது, இந்தியாவில் உள்ள மாணவரின் பெற்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை.இதுபோன்ற இந்திய மாணவர்களுக்கு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும். கட்டாயப்படுத்தி, குற்றவாளி போல் நடத்தி, இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்தப் பதிவில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க துாதர் உள்ளிட்டோரையும் அவர் இணைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கல்யாணராமன் சு.
ஜூன் 10, 2025 16:38

இந்த செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்கள், முக்கியமாக அந்த மூன்றாவது மனிதரின் காணொளியில் மூலமாக கிடைத்திருப்பவை, எந்த ஒரு முடிவுக்கும் வரத் தக்கனையாக இல்லை . ... அந்த இந்தியரை எதற்காக கைதுசெய்தார்கள் , விலங்கிடக் காரணம் என்ன போன்ற செய்திகள் தெரியாத வரை , தாமாக காரணங்களை ஊகித்து கருத்திடுவது கால விரயம் என நான் கருதுகிறேன் . ...


Parthasarathy Badrinarayanan
ஜூன் 10, 2025 14:38

கள்ளத்தனமாக குடியிருப்பில் விலங்கிட்டு வெளியேற்றுவது உலகநாடுகளின் வழக்கம். இதை செய்தியாக்கி பிழைக்க வேண்டாம்


lana
ஜூன் 10, 2025 13:41

"கட்டாய படுத்தி குற்றவாளி போல நடத்தி" அந்த நாடு உங்களை கட்டாய படுத்தி அழைத்துச் செல்லவில்லை. நீங்கள் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சென்றது அதற்கு சரியான விசா மூலம் செல்ல வேண்டும். அப்படிச் சென்றவர்கள் விசாவில் கூறப்பட்ட விதி முறைகளை மீறி படிக்க போன இடத்தில் போராட்டம் அல்லது அதற்கு ஆதரவாக பேசினால் எழுதினால் பார்த்து கொண்டு இருக்க முடியாது. ஒவ்வொரு மாணவர்கள் க்கும் அந்த அரசு வரி பணத்தில் இருந்து படிக்கும் கல்லூரி க்கு மானியம் வழங்கி வருகிறது. அவர்கள் வரி பணத்தில் படித்து அவர்கள் ஐ குறை கூறினால் சும்மா இருக்க முடியுமா


Mecca Shivan
ஜூன் 10, 2025 12:44

இந்தியாவில் கருத்துரிமை நசுக்கப்படுகிறது மதஉரிமை பறிக்கப்படுகிறது என்று கூறும் அமெரிக்க NGO கைக்கூலிகள் இனி யாரை குறை சொல்வார்கள் ?


Rathna
ஜூன் 10, 2025 10:59

படிக்க போன இடத்தில படிக்காமல் காசா ஜிஹாதிகளுக்கு கொடி பிடித்தால் இது தான் நடக்கும். இந்தியாவில் 50 வயது வரை சாதி பெயரை சொல்லி அரசு உதவி பெற்று கொண்டு காலேஜில் PHD படிப்பதும், அந்த அரசாங்கத்திற்கு எதிராகவே போராடுவதும், நாட்டை பிரிப்பேன் என்று உண்டியல் குலுக்குவதும் அங்கே நடக்காது.


என்னத்த சொல்ல
ஜூன் 10, 2025 10:43

இது வரை தமிழ் நாட்டிலிருந்து எந்த ஒரு நபரும் சட்டத்தை மீறிய செயலில் ஈடுபட்டு கைதி பண்ணி திருப்பி அனுப்பப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. படித்தவர்கள், சட்டத்தை மதிக்க தெரிந்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம்..


கல்யாணராமன் சு.
ஜூன் 10, 2025 16:31

முதல் பகுதி ரொம்ப கரெக்ட் . .... ரெண்டாவது வாக்கியந்தான் கொஞ்சம் இடிக்குது . ..... நடப்பைப் பாத்தா அப்படி தெரியலே . .... ஒருவேளை படித்தவர்கள், சட்டத்தை மதிக்க தெரிந்தவர்கள் எல்லாம் அங்கே போயிட்டாங்களோ ? அப்ப, மீதம் இங்கே என்ன இருக்கும் ??


VENKATASUBRAMANIAN
ஜூன் 10, 2025 07:41

இந்தியா மாதிரி சட்ட திட்டங்களை மதிக்காமல் அங்கு இருக்க முடியாது. எதற்காக சட்ட விரோதமாக தங்க வேண்டும்.


Natarajan Ramanathan
ஜூன் 10, 2025 05:52

நான் ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் இருப்பவன் என்ற முறையில் கூறுகிறேன். இங்கு இருப்பதைவிட மனித உரிமையை மதிக்கும் நாடு உலகில் வேறு எங்குமே இருக்கமுடியாது. ஆனால் இங்கு உள்ள சட்ட திட்டங்களை மதிக்காமல் கருத்துக்களை பதிவிட்டால் அதற்கான விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். அந்த மாணவர் கண்டிப்பாக பெரிய தவறு ஏதேனும் செய்திருப்பார்.


Sreenivas Jeyaraman
ஜூன் 10, 2025 06:34

நன்றி... நம் நாட்டின் நாகரிகம் பண்பாடு மற்றும் உயர்ந்த சிந்தனை ..இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் உண்டு.எந்த கருத்தும் உணர்வினால் வருவதே...அதற்காக அநாகரிகமாக பேச வேண்டாம்.. இன்றும் என் குடும்ப உறுப்பினர் பலர் அமெரிக்காவில் உள்ளனர். சில கருத்துக்கள் பதிவிட முடியும்.. கருத்து சுதந்திரம் இந்த மண்ணில் இருப்பதால் நாம் பரிமாறிகிறோம். தங்களின் சொற்கள் உள்ளபடியே ஏற்க முடியாது...நன்றி


Palanisamy Sekar
ஜூன் 10, 2025 04:14

யாராயினும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.. இருக்கவும் முடியும். பதிவில் சொன்னபடி அந்நாட்டு போலீஸ் ஒன்றும் வேண்டுமென்றே இப்படி செய்திருக்க வாய்ப்பே கிடையாது. சட்டதிட்டங்களை மதிக்கத்தவர்களை இப்படித்தான் கைவிலங்கிட்டு திரும்ப அனுப்புவார்கள் என்பது சர்வதேச விதியும் கூட. தப்பு செய்தவர்களை மட்டுமே போலீசும் சட்டமும் இப்படிப்பட்ட செயல்களை செய்திடும். எதுவும் அதுபற்றி தெரியாமல் பதிவிட கூடாது. இப்படி பதிவிட்டவர் அந்த நாட்டு கிரீன் கார்டு வைத்திருந்தால் உடனே வெளியேற்றுவார்கள். கொரோனா காலத்தில் லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இல்லாமல் வெளியே திறந்த பலரை அந்தந்த நாடுகள் அவர்களை வெளியேற்றியதை நாம் அறிவோம். சட்டங்களை மதிக்காமல் போனால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் இருக்கும். இதில் அழுவதற்கோ பரிதாபம் கொள்வதற்கோ எதுவும் இல்லை.


Seekayyes
ஜூன் 10, 2025 05:51

@Palanisamy Sekar, சரியாக சொன்னீர்கள். இந்திய ஊடகங்களில் இது போன்ற இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையை எந்தவொரு நாடு எடுத்தாலும் அந்த நாட்டின் நடவடிக்கையை அநியாயம் போல் சித்தரிப்பது, மற்றும் நம் மக்களை victim போல் பதிவிடுவது. அந்த மாணவன் என்ன செய்தான் என்பது யாருக்கும் தெரியாது. அமெரிக்கா இந்தியா இல்லை, அடாவடித்தனம் பண்ணிவிட்டு தப்பி செல்ல.


Ganapathy
ஜூன் 10, 2025 17:04

மிகச்சிறந்த பதிவு.


Kasimani Baskaran
ஜூன் 10, 2025 04:00

ஒரு பக்கம் தீவிரவாத ஆதரவு. அடுத்த பக்கம் ஹமாஸை ஒழித்துக்கட்ட இஸ்ரேல் செய்யும் சண்டையை ஆதரிப்பது, ரஷ்ய ஆதரவு அமேரிக்கா போன்ற பலமுக அமெரிக்காவை ஒரே நேரத்தில் உலகுக்கு காட்டிய ஒரே ஜனாதிபதி டிரம்ப் மட்டுமே.