வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சொந்த மண்ணில் சரியான தலைவனை தெரிவு செய்யாவிடில் இப்படி மானம் கெட்டு அலையவேண்டியது தான்
இந்த முட்டாள்கள் தன் அப்பன் சம்பாதித்த பணத்தில் இங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு பத்து ரூபாய் போடுவார்கள். தனது வீட்டில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் என்று வெயிட்டர் வேலைக்காக கைதட்டி நிற்கின்றனர்..... உழைப்பவர்கள் நிச்சயமாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.....
வெளிநாடுகளில் படிக்க செல்வோரில் பெரும்பாலோர் பகுதி நேர வேலை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற நோக்கிலேயே செல்கின்றனர். ஆனால் நிலைமை அங்கே தலைகீழ். பெரும்பாலான முதுகலை மாணவர்களின் பேராசிரியர்கள் அவர்களை பகுதி நேர பணிக்கு செல்ல அனுமதிப்பது இல்லை. இதனால் மாணவர்-பேராசிரியர் இடையே தேவையற்ற பிரச்சனைகள் உருவாகிறது. மேலும் பகுதி நேர வேலைக்கு செல்லும் மாணவர்களால் படிப்பில் ஆராய்ச்சியில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. இதை அனைத்தையும் தாண்டி வெளிநாடுகளின் குளிக்காலங்களை பெரும்பாலான இந்திய மாணவர்களால் தாக்கு பிடிக்க முடிவதில்லை. மிக முக்கியமாக கனடா போன்ற நாடுகள். வேலைக்கு போதிய விசா உடன் செல்வது உசிதமானது. பிடித்தால் வேலை செய்யலாம், இல்லையேல் இந்தியா வந்துவிடலாம். படிக்க செல்லும்போது மிகவும் கவனம் தேவை. திரும்பி வர வேண்டும் என்றாலும் மிக கடினம்.
அவர்கள் போலி மாணவர்கள்

வாழ்நாள் முழுவதும் தாய்தந்தையோர் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை வெளிநாட்டில் கொட்டிக்கொடுத்து, அங்கு கூலிவேலை செய்து, ஒன்றுக்கும் உதவாத உருப்படாத படிப்பை படித்துவிட்டு வெறுங்கையோடு தொண்ணூறு சதவீத இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பி, பெற்றோரின் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். படித்த படிப்பும் வேஸ்ட். ஏனனில் இவர்கள் இன்ஜினியரிங் படிக்க போவதில்லை. ஏதோ ஒரு உருப்படாத வேலைக்கு உதவாத படிப்பை படிப்பார்கள். செய்த கூலியும் வேஸ்ட். நொந்தது தான் மிச்சம்.
என்ன வளம் இல்லை இந்திய திருநாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்? பத்து வேலைக்கு மூவாயிரம் பேர் வரிசையில் நிற்கிறார்கள். சர்வர் வேலை கூட கனடாவில் கிடைக்காது. இந்தியாவிலிருந்து லட்ச கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து, கனடாவில் செலவழித்து வெறுமனே உழைத்துவிட்டு தொண்ணூறு சதவீதம் பேர் வெளிநாட்டில் குடியுரிமை ஏதும் கிடைக்காமல் இந்தியா திரும்புகிறார்கள்.
மேலை நாடுகளுக்கு படிக்கச்செல்லும் பல மாணவர்கள், தங்களது செலவை சமாளிக்க பெற்றோர்களுக்கு சிரமம் மேலும் கொடுக்காமல், வெயிட்டர், பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் பணிபுரிதல், பெட்ரோல் பங்குகளில் பணிபுரிதல் போன்ற சிறு சிறு வேலைகளை பகுதி நேர பணியாக செய்து முடிந்த அளவுக்கு தங்கள் செலவை சமாளிக்கின்றனர். அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் இங்கு அதிக அளவுக்கு மாணவர்கள் குவிந்து இருப்பதை பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது. என்ன வெளி நாட்டு படிப்போ, என்ன வெளிநாட்டு வேலையோ என்று என்ன தோன்றுகிறது.
இங்க அந்த வேலைய செஞ்சா மானம் போயிருமே...ரெஸ்ட் ரூமை க்ளீன் பண்ணினாலும் பிளேன்ல போய் கனடாவுல க்ளீன்பண்ணினாத்தானே " கவுரவம்"
நமக்கு வடக்கன் மாதிரி? அனைத்து நாடுகளுக்கும் நாம்தான் போலையே?
படிக்க மட்டும் போங்கள்,வேலை வாய்ப்பு மிகவும் குறைவு. விலை மிக அதிகம். இந்தியாவில் ₹100/= என்றால் இங்கு ₹500-600/=,இங்கு நமது மதிப்பில் ₹5 லட்சம் சம்பளம் என்றால்,நம்ம இந்தியாவில் ₹50000/= சிறந்தது.வீட்டு வாடைகை மட்டும் ₹1.5- 2 லட்சம் .