உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்

வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் சரிந்து வருகிறது.அமெரிக்க அதிபராக, கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். விசா நடைமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை என்ற வகையில், பல அதிரடி அறிவிப்புகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cbqdovw8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே தற்போது பல நாடுகளுடன் பரஸ்பர வரி போரை டிரம்ப் நடத்தி வருகிறார். பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வெளிநாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவித்தால், உடனடியாக தானாக வெளியேறும்படி உத்தரவிடப்படுகிறது.இதுபோன்ற காரணங்களால், அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் குறைந்துள்ளது.அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, எப் 1 மற்றும் எம் 1 விசாக்கள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க அரசின் புள்ளி விவரங்களின்படி, கடந்தாண்டு ஜூலையில், 3 லட்சத்து 48 ஆயிரத்து 446 மாணவர்கள் படித்து வந்தனர். இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 447ஆக குறைந்தது.வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் தான், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த காலங்களில் இந்திய மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதில் பெரும் சரிவு காணப்படுகிறது. மாற்று நேர்முக பயிற்சி திட்டத்தின் கீழ், வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்ததும், மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி கூடுதல் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு தரப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தை ரத்து செய்யும் வகையிலான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஒரு பக்கம் விசா கட்டுப்பாடுகள், மறுபக்கம் கல்விக் கட்டணம் உயர்வு ஆகியவற்றுடன், டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகள், அமெரிக்காவுக்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Easwar Kamal
ஏப் 09, 2025 18:38

டிரம்ப் இருக்கிற வரை இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நம் மாணவர்களும் குறிப்பாக ஆந்திராகார பயபுள்ளைகள் அடாவடித்தனத்துக்கு அளவே கிடையாது. இவனுங்க kassu வேணும்ன்னு அர்த்த ராத்திரியில் எங்காவது வேலை பார்க்க வேண்டியது அது போலீஸ் கூட போகாது அங்கு போய் வேலை பார்க்க வேண்டியது பின்னர் குண்டு அடி பட்டு சாக வேண்டியது. அதுக்கு மரியாதையா இந்தியாவில் இருக்கலாம். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் கிறீன் கார்டு கிடைப்பது கடினம். கிறீன் கார்டு எல்லாம் டிரம்ப் விற்று பணமாக முயற்சி செய்கிறார். இதில் சாதாரணமான மாணவர்களுக்கு எங்க கிடய்க்கபோகுது


பேசும் தமிழன்
ஏப் 09, 2025 18:35

என்னது அமெரிக்காவை புறக்கணிக்கிறார்களா.... படிக்க போகிறேன் பேர்வழி.... அங்கே திருட்டுத்தனமாக போனால் கையில் விலங்கு மாட்டி அனுப்பி விடுகிறார்கள்.... அந்த பயம் தான் உண்மையான காரணம்.


Ganapathy
ஏப் 09, 2025 16:39

தமிழர்கள் அறிவாளிகள்


Sivasankaran Kannan
ஏப் 09, 2025 15:15

சில திராவிட எருமட்டை கூட்டம் தமிழன் என்ற பெயரில் விஷம் காக்கும்.. இந்த மாதிரி திராவிட மாடல் கால் நாக்கி ஜந்துக்களால் பிரச்சனை மட்டுமே.. 200 ரூபாய் ஜந்துக்கள் .. படிப்பு பற்றி எதுவும் தெரியாமல் அறிவற்ற திராவிட கருத்துக்கள் உதிர்க்க படும்..


Yes your honor
ஏப் 09, 2025 14:47

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? வெற்று மோகம். இந்தியர்களை மெதுவாக திருத்துவதால் டிரம்பிற்கு வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
ஏப் 09, 2025 12:55

ட்ரம்பின் பல அதிரடி முடிவுகளைக்கண்டு இந்திய மாணவர்கள் கொஞ்சம் பயப்படுகின்றனர் போல தெரிகிறது. போதாக்குறைக்கு அமெரிக்காவில் தினம் தினம் துப்பாக்கி சூடு. அதில் பல இந்திய மாணவர்கள் பலியாகின்றனர். நிலைமை அப்படி இருக்கையில் யார் மேற்படிப்புக்கு அங்கே செல்ல விரும்புவார்கள், ஒரு சில பித்துபிடித்த, வெளிநாட்டு மோகம் கொண்ட மாணவர்களைத்தவிர.


Thetamilan
ஏப் 09, 2025 12:50

பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியர்க அந்நிய நாடுகளுக்கு சென்று படித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு. இன்று எவ்வளவு?. துளியாவது குறைந்துள்ளதா?. டிரில்லியன் டாலர் கொட்டியும் ஒன்றும் குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது . கொள்ளையர்களின் கூடாரம் பாஜ அரசு, இந்து மதம் . இந்திய கல்வித்துறையில் இந்துமதவாதிகளின் ஆக்கிரமிப்புதான் இந்தியர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல முக்கிய காரணம்


Raman
ஏப் 09, 2025 14:14

These comments reflects your mindset ..come out with your true name...hiding behind tamil name proxy


Thunba nidhi
ஏப் 09, 2025 14:55

இது போல தலையும் புரியாமல் காலும் புரியாமல் பாஜகவை குறி வைத்து தாக்குவது மட்டுமே நோக்கம் என்பது போல பதிவிடுபவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுதல் அவர்களுக்கும் நலம், நாட்டுக்கும் நலம். நல்ல வேளை, தினமலர் என்பதால் ஒரு கட்டுப்பாடோடு கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. மற்ற சமூக ஊடகங்களில் பாஜக எதிர்ப்பாளர்களை எதிர்கொள்வது சிரமமே. தரம் தரை மட்டம்.


Savitha
ஏப் 09, 2025 15:08

பேரு thetamilan, ஆனா அதை இங்கிலிஷ் எழுத்தில் எழுதும் உங்கள் மொழி பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது, விஷயமே என்னான்னு புரியாம ஏன் இங்கே வந்து கருத்து போடறேன் அப்டின்னு இப்டி உளரு உளருன்னு இங்கே வந்து உளருகிறீங்க? ₹200 ரூபாய்க்கு இவ்வளவு கேவலமா தான் கருத்து போட முடியும் போல.......


Sivasankaran Kannan
ஏப் 09, 2025 15:09

வாய்யா திராவிட மாடல்.. முடிந்தால் மூளையை வளர்த்து கொள் .. திராவிட அடிமையாக இருக்காதே..


Sankaran Kumar
ஏப் 09, 2025 16:41

தரமற்ற 200


Venugopal, S
ஏப் 09, 2025 18:52

அப்படி ஒண்ணும் இல்லையே...நாளுக்கு நாள் மக்கள் தொகை இங்கே கூடிவிட்டது...நாங்க கட்டுற வரிபணத்தில் எல்லா சலுகைகளும் அனுபவத்து கொண்டு கருத்து போடுறீங்க. நீங்க எல்லாம் பேசாமல் உங்க நாட்டுக்கே போயிடுங்க.


Sundar
ஏப் 10, 2025 19:21

இந்து மதம் வேண்டாம்... எந்த மதம் வேண்டும் என்று கூற முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை