உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாடுகளில் 300 சதவீதம் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள்

வெளிநாடுகளில் 300 சதவீதம் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நம் நாட்டில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு 100 முதல் 300 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைப்பதாகவும், இதை அவர்கள் உள்ளூரில் பெறுவதற்கு 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என உலக வங்கி கூறியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை:

உலகம் முழுதும் 18.4 கோடி பேர் வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 3.7 கோடி பேர் அகதிகள். புலம்பெயர்ந்தவர்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு சென்றவர்கள் அதிகம்.அரபு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு டிரைவர், கட்டுமானப் பணி, டெலிவரி, வீட்டு வேலை போன்ற குறைந்த திறன் தேவைப்படும் பணியில் ஈடுபடும் இந்தியத் தொழிலாளர்கள் இங்கு கிடைப்பதை விட, 118 சதவீதம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்கள், 298 சதவீதம் அதிக வருவாய் பெறுகின்றனர். அந்த வருவாயில் 85 சதவீதத்தை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த பணம் இங்கு செலவிடப்படுகிறது. இதே போல் அமெரிக்காவில் திறன் குறைந்த பணிகளில் உள்ள இந்தியர்களின் வருமானம், 500 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழில் வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவை, இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு காரணமாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V RAMASWAMY
செப் 26, 2024 09:42

மக்கள் வரிப்பணத்திலிருந்து எம் எல் ஏக்கள், எம் பிக்கள் இவர்களுக்காக ஆகும் சம்பளம், சலுகைகள், பாதுகாப்பு, பென்ஷன், இதர செலவுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் அதாவது 10000 கோடி ரூபாய். இந்த நிலையில் ஏன் மத்திய மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் சம்பளங்களை இங்கேயே அதிகரித்து கொடுக்காக கூடாது? அவர்களது படிப்பும், அறிவும், தொழில்நுட்பமும் நமக்கே பயன்படும் அல்லவா?


Duruvesan
செப் 26, 2024 08:01

பாஸ் quota, நண்பன் gold medal vaanginaan , இன்னொருத்தன் quotala சேர்ந்து fail ஆகி அப்புறம் பாஸ் ஆனான் . அவனுக்கு அரசாங்க வேலை இப்போ utive என்ஜினீயர். இவன் வெளிநாடு போனான், .நல்லா இருக்கான், பிள்ளைகள் இங்க படிக்குது, பெங்களூரு ல, அவங்களும் BE முடிச்சிட்டு மேலே படிக்க அங்க போய்டுவாங்க. அங்க திறமைக்கு மதிப்பு. இங்க?


VENKATASUBRAMANIAN
செப் 26, 2024 08:00

இங்கு மே அதே அளவு சில துறைகளில் உயர்ந்து உள்ளது. உதாரணமாக கட்டுமான துறையில் வேலை செய்பவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதுபோல் நிறையவே. வித்தியாசம் டாலர் மதிப்பு.


Kasimani Baskaran
செப் 26, 2024 05:39

இந்தியாவிலும் உற்பத்தித்திறன் அதிகரித்தால் சம்பளம் அதிகரிக்கத்தான் செய்யும். தொடர் பயிற்சி, தரமான கல்வி மூலம் அதை சாதிக்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை