வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஹவாலா ஆசாமிகளுக்கு கொண்டாட்டம்தான். டிரம்புக்கு இந்தியர்களைப் பற்றித் தெரியவேண்டும்
அமெரிக்காவின் பணம் பலநாடுகளுக்கு செல்வதை தடுக்க இந்த வரி விதிக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தை வளர்க்கும். ட்ரம்பை தேர்ந்தெடுத்தவர்கள் அமெரிக்கர்கள். அவர் அவர்களின் நலனிற்காக உழைக்கிறார். ட்ரம்பை போன்று மோடியும் இந்தியாவிற்காக உழைக்கிறார். பக்கத்துக்கு நாட்டிற்காக உழைக்கும் ராகுல் ஒருக்காலும் பிரதமர் ஆகமுடியாது.
கிரிப்டோ மூலம் அனுப்ப வேண்டும். 38% வரி போட்டும் கூட திருப்தியடையாத அமெரிக்காவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
நம்ம ஆளுங்களுக்கு எல்லாம் இலவசமாகதான் வேண்டும்?
டிரம்புக்கு முத்திபோவதற்கு முன் அமெரிக்கா வாழ் அனைத்து பாரத நாட்டவரும் மருத்துவர், விஞ்ஞானிகள் உட்பட அங்கிருந்து வெளியேறுவது உலக நன்மைக்கு நல்லது. அமெரிக்கவையும் சீனாவையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும் இருவரும் துரோகிகள்.
அமெரிக்காவில் ஒரு சதவிகித இந்திய வம்சாவளியினரும் குடியுரிமை பெறாத இந்தியர்களும் செலுத்தும் வருமான வரி ஆறு சதவிகிதம். குடியேறிய பலநாட்டு வம்சாவளியினரை விட கல்லூரிகளில் படிக்கும் இந்திய வம்சாவளியினர் மிகவும் அதிகம். அமெரிக்காவில் பல முக்கிய பதவிகளிலும் கம்பெனிகளில் தலைமை பொறுப்பிலும் இந்திய வம்சாவளியினர் அதிகம். குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு இவர்களுக்கு உண்டு. சீனாவை விட அதிக ஜனத்தொகை கொண்ட இந்தியா அவர்கள் அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பொறாமை தேவை இல்லை
இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அனுப்புகின்ற பணத்துக்கு 35 முதல் 45 சதவிகிதம் வருமானவரி கட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் நடக்கும் வெளிப்படையான பரிவர்த்தனை தான் இந்த 5 சதவிகித வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தால் அரபு நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் வரி விதிக்க ஆரம்பிப்பார்கள்
பல மாணவர்கள் இங்கு கல்விக்கடன் போல எடுத்து அங்கு சென்று அடைப்பட்டுவிடுகிறார்கள். அதுபோல் இங்குள்ள பெற்றோர் மருத்துவம் , குடும்பத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் தேவைக்கேற்ற தொகையை அனுப்ப வேண்டியுள்ளது. இதற்கும் வரி என்றால் இங்குள்ளவர்களுக்கு அனுப்புவதில் சுணக்கம் ஏற்படும் அவர்களுக்காக இங்கு கடன் வாங்கியவர்கள் தவிக்க நேரிடும். சிலர் நிரந்தரமாகத் தாய் நாடு திரும்ப அங்குள்ள சொத்துக்கள், வாகனங்களை விற்று எடுத்துவர முயற்சிப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இது மிகவும் கடினமாகும்.