உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேஷியா 13 நாடுகளின் சூப்பர் கருடா ராணுவ கூட்டு பயிற்சி துவக்கம்

இந்தோனேஷியா 13 நாடுகளின் சூப்பர் கருடா ராணுவ கூட்டு பயிற்சி துவக்கம்

ஜகார்த்தா:இந்தோனேஷியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் இந்தோ - பசிபிக் நாடுகளின் ராணுவ கூட்டுப் பயிற்சி, நடப்பாண்டில் 'சூப்பர் கருடா 2025' எனும் பெயரில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் துவங்கியுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து, 2009ம் ஆண்டில் இருந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும். இதில், 2022ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிரேசில் மற்றும் தென்கொரியா ஆகியவையும் இணைந்துள்ளன. ஜகார்த்தா மற்றும் சுமத்திரா தீவில் 11 நாட்கள் நடக்கும் கூட்டுப் பயிற்சியில், 13 நாடுகளின் 6,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டுப் பயிற்சி செப்., 4 வரை நடக்க உள்ளது. இப்போர் பயிற்சிக்கு பல ஆசிய நாடுகளும் பார்வையாளர்களை அனுப்பியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி