உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது!

வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது!

டாக்கா : நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் நேற்று இடைக்கால அரசு பொறுப் பேற்றது. ேஷக் ஹசீனா ஆட்சியில் இந்தியாவுடன் இருந்த நல்லுறவை யூனுஸ் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.பாகிஸ்தானுடன், 1971ல் நடந்த சுதந்திரப் போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடானது. அந்த போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=euqoau7t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை, கடந்த ஜூனில் 30 சதவீதமாக உயர்த்தி டாக்கா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அதை கண்டுகொள்ளவில்லை. மாணவர்கள் சாலையில் இறங்கி போராடினர். 'அரசுக்கு எதிராக போராடுபவர்கள் தேசத் துரோகிகள்' என்றார் ஹசீனா. மாணவர்கள் கொந்தளித்தனர். போராட்டம் தீவிரம் ஆனது. எதிர்க்கட்சியினரும் மாணவர்களுக்கு ஆதரவாக வீதிக்கு வந்தனர். வங்கதேசம் போர்க்களமானது. 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பிரதமரின் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஊரடங்கை அமல்படுத்த ராணுவம் சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி, ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தனி விமானத்தில் தப்பி இந்தியா வந்தார். இதை தொடர்ந்து, வங்கதேச பார்லிமென்டை கலைத்தார் அதிபர் முகமது ஷஹாபுதீன். இடைக்கால அரசு அமைக்க உத்தரவிட்டார். அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் இடைக்கால அரசு அமைக்க ஏற்பாடு செய்தது. அரசியல்வாதி அல்லாத அரசு வேண்டும் என மாணவர்கள் கோரினர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க சம்மதம் தெரிவித்தனர். பாரிசில் இருந்த யூனுஸ், நேற்று அதிகாலை 2:10 மணிக்கு டாக்கா வந்தடைந்தார். ராணுவ தலைமை தளபதி வகேர் உஜ் ஜமான், மூத்த அதிகாரிகள், மாணவர் அமைப்பு தலைவர்கள் வரவேற்றனர். அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், யூனுஸ் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார்.''இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுவிட்டோம். அதை பெற்றுத்தந்த இளைய தலைமுறையினருக்கு நன்றி. தேசம் உங்கள் கைகளுக்கு வந்துவிட்டது. அதை உங்கள் கனவுகளுக்கு ஏற்ப கற்பனை திறனுடன் கட்டியெழுப்புங்கள். நாம் அமைப்பது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக இருக்க வேண்டும்,'' என்றார்.அங்கிருந்து, அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வங்கபவன் சென்றார். இரவு எட்டு மணிக்கு இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார். அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். யூனுஸ் உடன், 16 பேர் இடைக்கால அரசின் ஆலோசகர்களாக பதவி ஏற்றனர். வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர் சலே உதீன் அகமது, முன்னாள் தேர்தல் கமிஷனர் ஷகாவத் ஹுசைன், டாக்கா பல்கலை சட்ட பேராசிரியர் ஆசிப் நஸ்ருல், சமூக செயற்பாட்டாளர் அடிலுர் ரஹ்மான் கான், மாணவர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இருவர் அவர்களில் அடங்குவர்.

தொடரும் கொள்ளை

அச்சத்தில் மக்கள்ஹசீனா வெளியேறிய பிறகும் டாக்கா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வன்முறை ஓயவில்லை. மக்கள் பீதியில் உள்ளனர். சமூக விரோதிகள் கொள்ளையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. பல வீடுகளில் புகுந்த கும்பல்கள், ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்றன. ஹசீனாவின் கட்சியை சேர்ந்தவர்களே பெரும்பாலும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஹசீனா ஆட்சியின் அடக்குமுறைக்கு பழிவாங்கும் செயல் இது என நிபுணர்கள் கூறுகின்றனர். பல பகுதிகளில் இளைஞர்கள் குழுவாக சேர்ந்து தடி மற்றும் கிரிக்கெட் மட்டைகளை ஏந்தியபடி இரவு முழுதும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

திரும்பி வருவார் ஹசீனா!

ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய் கூறியதாவது:என் தாயார் ஹசீனா மீண்டும் வங்கதேசம் வரமாட்டார் என கூறினேன். ஆனால் கடந்த இரு தினங்களில் எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனியே தவிக்கவிட்டு எங்களால் இருக்க முடியாது; ஹசீனா நிச்சயம் நாடு திரும்புவார். நாட்டில் நடந்த குழப்பங்களுக்கு பின்னால் பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உள்ளது. போராட்டக்காரர்கள் போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாத அமைப்புகள், வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து தான் அவர்களுக்கு துப்பாக்கி கிடைத்திருக்க வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் என் தாயாரை பாதுகாக்கும் இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

MUTHU
ஆக 09, 2024 21:09

நமது முதலாம் சுதந்திரப்போர் நடைபெற்றபொழுது இந்திய புரட்சியாளர்கள் தங்களுக்குள் துடிப்புடன் இருந்த ஒருவரை தலைவர் ஆக்காமல் கடகடத்து, லொடலொடத்து, ஊதினால் விழுந்துவிடும் நிலையில் சுமார் எழுபது வயதுக்கு மேல் இருந்த முகலாய மன்னர் பகதூர்ஷா-வை தலைவர் ஆக்கினார்கள். அதை போன்று இருக்கின்றது இவர்களின் தேர்வு. அவரை பிரிட்டிஷ் படை துவம்சம் செய்து, பாவம் போனால் போகிறது என்று நாடு கடத்தி விட்டார்கள்.


Senthoora
ஆக 09, 2024 20:01

அமெரிக்கா தனது கபட நாடகத்தை அரங்கேற்றி, தனது பொம்மையை அங்கே தலைவனாக்கிவிட்டது.என்ன 30 வருடங்கள் தேவைப்பட்டது.


kulandai kannan
ஆக 09, 2024 15:26

அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கிய நோபல் பரிசுகள் அரசியல் சார்புடையனவே. அணுவைப்பிளப்பதுபோல், துளியூண்டு டிமோர் தீவை உடைத்து கிழக்கு டிமோர் கோரிய (கிறித்தவ குழூ) தலைவருக்கு நோபல் கொடுத்தார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 13:51

வங்கதேசத்தின் பொருளாதாரம் தலை நிமிரணும்.. முன்பு இறுதி முடிவு ஷேக் ஹசீனா கையில் மட்டும்... இன்றோ அதிகாரத்தில் இருப்பவர் பலர்... பொருளாதாரம் என்ன ஆகும்?? என்னத்தைச் சொல்ல.. திராவிட மாடல் ஆட்சியைப்போலத்தான் நிலைமை ... நம் நாட்டிலேயே கடன் அதிகம் வாங்கிவரும் மாநிலம் தமிழ்நாடு ... ஆனால் அரசுத்திட்டங்களை அதிக பொருட்செலவு செய்து விழா நடத்தித்தான் துவக்கி வைக்கிறார்கள் ......


ஆரூர் ரங்
ஆக 09, 2024 11:44

காட்டுமிராண்டி மார்க்கத்தைக் காட்டி ஏமாற்றும் காலிதா ஜியா கும்பலின் ஆதரவில் அரசை அமைத்தால் யூனுஸ் உயிருடன் வாழ்வது கஷ்டம்..


Duruvesan
ஆக 09, 2024 11:26

அய்யா மோடி எங்க வரி பணத்துல மூர்க்க நாடு பிச்சை எடுக்கும் போது அள்ளி விட்டு விஸ்வ குருன்னு பீதிக்க வேண்டாம்.உடனே மூர்க்கணும் தானே வரி கட்டாரான்னு பீத்துவானுங்க, அவங்க வரி கட்டுவது 3%, ஹிந்து மற்றும் இதரவர் கட்டுவது 97%.


அனுபமா
ஆக 09, 2024 11:11

அஞ்சாறு மாசம் தாக்கு பிடித்தாலே அதிகம்.


Anand
ஆக 09, 2024 11:10

ஊரை அடித்து சூறையாடுவதை இரண்டாம் சுதந்திரம் என்கிறான், சுதந்திரம் வாங்கி தந்த நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் மூர்க்கம். நன்றி கெட்ட ஜென்மங்கள்.


veeramani hariharan
ஆக 09, 2024 09:27

Noble prize are being given to such types of leftists people to keep their respective Country in turmoil. This is the tactics of Europe and western Country to ensure that the developing countries are remain developing nation only.


veeramani
ஆக 09, 2024 09:11

நமது எதிரியான பாகிர்ஸ்தான் திட்டம்தீட்டி பங்களாதேஷ் மக்களையும் இந்தியாவையும் பழிதீர்த்துள்ளது இது பங்காளதேசிகளுக்கு புரியவில்லை இது அவர்களின் சொந்த தலைவலி. இனிமேலும் எவனாவது ஏழைகள், என வந்தேறிகளுக்கு முட்டு கொடுக்கக்கூடாது. நமது இந்தியாவில் வசித்துவரும் ..களை ஒரு வருடத்திற்குள் அவர்களது நாட்டிற்கு கட்டாயமாக திரும்பி அனுப்பவேண்டும். எல்லைகளை பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி