உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான்- இஸ்ரேல் போர் : 15 மணி நேரம் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸி., விமானம்

ஈரான்- இஸ்ரேல் போர் : 15 மணி நேரம் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஆஸி., விமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்த்: ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, பாரிஸ் செல்லும் ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமானம், 15 மணி நேரம் வானில் சுற்றியபின், மீண்டும் புறப்பட்ட இடமான பெர்த்திற்கு திரும்பியது.ஆஸ்திரேலியாவின் தேசிய விமான ஏர்லைன்ஸ் நிறுவனமான குவாண்டாஸ் போயிங் கோ.787 பாரிஸ் செல்ல திட்டமிடப்பட்டு, நேற்று உள்ளூர் நேரப்படி, இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு வானில் பறந்தது. ஆனால், ஈரான்-இஸ்ரேல் பதட்டத்தால் திட்டமிட்ட இலக்கை அடைய முடியாமல் புறப்பட்ட இடமான பெர்த்திற்கு மீண்டும் திரும்பியது.இது குறித்து குவாண்டாஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:இஸ்ரேல் -ஈரான் விவகாரத்தில் ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டபோது, போயிங் கோ.787 விமானம்,​​இந்திய வான்வெளியின் தென்மேற்கு எல்லை வரை சென்று கொண்டிருந்தது, மேலும் 15 மணி நேரமாக வானில் சுற்றிக்கொண்டே இருந்த நிலையில், விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று காலை 11 மணியளவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் தரையிறங்கியது.அதேபோல, பெர்த்திலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்குச் சென்ற மற்றொரு விமானமும் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த இரண்டு விமானங்களிலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Yaro Oruvan
ஜூன் 24, 2025 21:39

அமைதி மார்க்கம் எப்படி பிரச்னைகளை தீர்க்கும்?? ஒரு பிரச்னையும் இல்லன்னா அவனுங்களுக்கு உள்ளேயே பிரச்சனைய உண்டு பண்ணி குண்டு போடுவானுவ.. இந்த லட்சணத்துல


தத்வமசி
ஜூன் 24, 2025 21:37

இல்லை. ஒரு இடத்திற்குச் சென்று திரும்ப வரும் அளவிற்கு அதில் எரிபொருள் நிரப்பப் படும். ஆனால் செல்லும் இடத்தில் மீண்டும் அங்கே நிரப்பப்படும். இப்போது நடந்தது போன்ற நிகழ்வுகளில் தற்காப்புக்காக அதிக எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.


Ramesh Sargam
ஜூன் 24, 2025 20:29

இப்படி விமானங்கள் பல மணிநேர பயணத்துக்கு பிறகு திருப்பிவிடப்பட்டால், விமானத்தில் எரிபொருள் குறைந்து விபத்து ஏற்படாதா? ஏன் அந்த போரிடும் நாடுகள் இதை புரிந்துகொண்டு போரை நிறுத்தி, அமைதி மார்க்கமாக தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில்லை?


Raj
ஜூன் 24, 2025 18:21

எல்லா விமானங்களுக்கும் "ஏர் கொரோனா" பிடித்து விட்டதுபோல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை