உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்: அமெரிக்கா, பிரிட்டன் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்

தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்: அமெரிக்கா, பிரிட்டன் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது. இதனையடுத்து, நட்பு நாடான அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து செயல்படுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. இக்கொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது.இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லாண்ட் கூறுகையில், அமெரிக்க அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் பிரிட்டன் அமைச்சர் ஜான் ஹூலே உடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, பாதுகாப்பு சூழ்நிலை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த இரு நாடுகளுடனும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த முறை தாக்குதல் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அதேநேரத்தில் கடந்த வாரம் அமெரிக்க அமைச்சர் ஆஸ்டின் லாயிட் கூறுகையில், இஸ்ரேல் தாக்கப்பட்டால், நிச்சயம் அந்நாட்டிற்கு உதவுவோம். பிரிட்டனுடனும் ஆலோசனை நடத்தி உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
ஆக 05, 2024 11:49

அமெரிக்கா சப்போர்ட் இல்லேன்னா இஸ்ரேல்.இல்லை.


Aroul
ஆக 05, 2024 10:54

வள வளன்னு பேசிக்கிட்டு சீக்கிரமா யாரு பெரியவங்க காட்டுங்க.


kantharvan
ஆக 06, 2024 16:14

நடந்தா நல்ல பாம்பு கொத்துது ..படுத்தா பச்சை பாம்பு கொத்துது ...இரான் துறைமுக முதலீடும் அம்போ ...பங்களாதேஷ் பவர் சர்விசும் அம்போ ... முதலீடும் வெளியேறுது அம்போ ?? அருள் அடிவயிற்றலும் அடி விழும் .


ஆரூர் ரங்
ஆக 04, 2024 21:53

கியாமத் நாளை தானே தேடிக் கொள்கிறார்கள்.


Kasimani Baskaran
ஆக 04, 2024 20:46

தீவிரவாதம் அழிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.


kantharvan
ஆக 06, 2024 16:10

உண்மைதான் இஸ்ரேலியர்கள் நடத்தும் பயங்கரவாதம் அழிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 19:01

அவிங்க சொல்லுற இறுதிநாள் நெருங்கிடுச்சு போல .......


நிக்கோல்தாம்சன்
ஆக 04, 2024 18:57

உலக போராக மாற்றாமல் , உக்ரைன் போரை போல நீண்ட காலம் இழுத்தடிக்காமல் சீக்கிரம் முடிங்கப்பா ,


kantharvan
ஆக 06, 2024 16:10

முடிச்சிடலாம் கண்ணா முடிச்சிடலாம்.


K.Muthuraj
ஆக 04, 2024 17:15

அப்படி ஒன்று நடந்தால், இஸ்ரேல் ஈரானில் எதை எதை தாக்கவேண்டும் என்று பேசிமுடித்திருப்பார்கள்.


Swaminathan L
ஆக 04, 2024 16:13

இஸ்ரேல் ஹமாஸ் போர் இப்போது இஸ்ரேல் - ஹமாஸ், ஹவுத்தி, ஈரான் போராக மாறுகிறது. பெரியண்ணன் அமெரிக்கா ஏதாவது செய்து ஈரானை அமைதிப்படுத்தா விட்டால் சண்டை விரைவில் பெரிய அளவில் நடக்கும்.


Apposthalan samlin
ஆக 04, 2024 16:07

ஈரான் போர் செய்தால் இதோடு ஈரான் காலி சன்னி மக்கள் சப்போர்ட் பண்ண மாட்டார்கள் ரஷ்யா சீனா பக்கத்தில் வராது othayil போராட முடியுமா ?


kantharvan
ஆக 04, 2024 16:40

முடியும் என்பவன் முஸ்லீம்...முடியாது என்று அடிபணிபவனே அப்போஸ்தலன் .


Kumar Kumzi
ஆக 04, 2024 15:35

மூர்க்கம் அழிவை தேடி செல்கிறது வாழ்த்துக்கள்


kantharvan
ஆக 06, 2024 16:01

துன்மூர்க்கத்தை அழிக்க மூர்க்கம் ஒன்றே தீர்வு


மேலும் செய்திகள்









புதிய வீடியோ