உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ரம்ஜான் பண்டிகை காலத்தில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 அக்.,ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9cc5ajw6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வருகின்றன. இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் விரைவில் முடிவடைய உள்ளது.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை காலத்தில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் முன் மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கமாகும். ரம்ஜான் தொடங்கும்போது, உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் மாதத்தை வரவேற்கிறார்கள். இதனால் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kalyan
மார் 02, 2025 14:56

மதம் எல்லோரையும் அரவணைத்து போக வற்புறுத்துகிறது . வணங்கும் கடவுள் யாரானாலும் அவர்களும் மனிதர்கள் அவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறது . தங்கள் கடவுளை நம்பாதவர்களை காட்டும் பிராண்டிகள் என்றோ அவர்களை கொல்வதே கடமை என்றும் போதிப்பதில்லை


ஆரூர் ரங்
மார் 02, 2025 11:39

வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் விலக்கு கொடுங்க. அன்னிக்கு குண்டு வைக்காட்டி கை அரிக்கும்.


கிஜன்
மார் 02, 2025 10:09

நேற்று ஜெலன்ஸ்கிக்கு விழுந்தது .... இஸ்ரேல் ... குர்திஸ் என பேஸ்மேக்கர் மாட்ட வந்தவங்களல்லாம் ...பீஸ் மேக்கரா மாறிட்டாங்க .... எல்லா நாட்டிற்கும் ஒரு உறுதியான தலைமை இருப்பது நல்லது ....


natarajan
மார் 02, 2025 09:45

To prepare for next level of war


visu
மார் 02, 2025 09:27

அனால் உதவி பொருட்களை அனுப்புவதை நிறுத்தி வையுங்கள் இல்லாவிட்டால் இதே மாதத்தில் மறு தாக்குதல் நடத்தப்படலாம் .


Kasimani Baskaran
மார் 02, 2025 09:10

தீவிரவாதத்துக்கு மதம் கிடையாதே பின்னர் எதற்கு இவ்வளவு கனிவு.


Haja Kuthubdeen
மார் 02, 2025 09:58

ரொம்ப ஆடாதிங்க...உலகில் எதுமே நிறந்தரம் கிடையாது..சுதந்திரத்துக்கு முன்பு நாமும் வெள்ளையர்களிடடம் கஸ்டபட்டவர்கள்தான்.


Haja Kuthubdeen
மார் 02, 2025 10:09

காசிமனி உங்களை போன்றோருக்கும் மதம் கிடையாதா..


Laddoo
மார் 02, 2025 15:10

மதம் மனிதனை நெறிப்படுத்துவதற்கு. மூர்க்க மதம் மனித நேயமே இல்லாமலிருக்கிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை