உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்; குவியும் கண்டனம்

கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்; குவியும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தோஹா: ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு அழிக்கும் விதமாக, இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை கத்தார் அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.இந்தத் தாக்குதலில் கத்தார் பாதுகாப்பு படை வீரர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்.,7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நேற்று முன்தினம் ஜெருசலேமில் 6 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகே, அமெரிக்கா தங்களை எச்சரித்ததாக கத்தாரின் பிரதமர் ஷெய்க் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி கூறினார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே முக்கிய மத்தியஸ்தராக செயல்படும் கத்தார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, சர்வதேச விதிகளை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல என்றும் அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 11, 2025 03:42

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது


Kasimani Baskaran
செப் 10, 2025 14:54

தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்க்க வேண்டும். குண்டு வைக்கும் பொழுது எல்லோரும் சாகத்தான் போகிறார்கள்.


R. SUKUMAR CHEZHIAN
செப் 10, 2025 12:50

இஸ்ரேல் செய்வது உலக நன்மைக்காக, ஜிகாதி குப்பைகளை அகற்றி விட்டால் உலகம் அழகாக மாறும். ஜிகாதி கும்பல்கள் நன்றி கெட்ட கூட்டங்கள். Bharath Stands with Israel.


Sangi Mangi
செப் 10, 2025 17:14

சங்கி குப்பைகளை அகற்ற குண்டை எங்க போடணும் என நீ சொன்ன இசுரேல் அங்க போட்டுவிடும்,,,,


குல்லா முல்லா
செப் 10, 2025 21:30

இஸ்ரேல் எப்பவுமே துலுக்கன் மேல மட்டும் தான் குண்டு போடும் உனக்கு ok வா


Sangi Mangi
செப் 11, 2025 11:25

உன் மேல் பாக்கிஸ்தான், அபிகானிஸ்தான், காத்தார் குண்டு போடும்


BHARATH
செப் 11, 2025 16:19

பாக்கிஸ்தான் அவனுகளுக்குள்ளேயே அடிச்சு போய்டுவானுங்க. எதுக்குடா குண்டை நாங்க வீண் பண்ணனும்.


Perumal Pillai
செப் 10, 2025 12:28

Well done, Israel. Qatar is the fountainhead of islamic terrorism, with its terror mouthpiece Al Jazeera spreading propaganda across the world.


Rathna
செப் 10, 2025 11:32

கத்தார் ஒரு தீவிரவாத நாடு. அல்ஜஷீரா என்னும் டிவி சேனலின் மூலம் தவறான தீவிரவாத ஆதரவு கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்புகிறது. எண்ணெய் மூலம் கிடைக்கும் அதிகமான லாபத்தை உலகத்தில் தீவிரவாதத்தை பரப்புவதில் முன்னோடி. இந்த பணம் இந்தியாவிற்கு ஹவாலா மூலம் வந்து ISIS ஆள்சேர்ப்பு, நாட்டில் பல இடங்களில் கல் எறிவது, வழிபாட்டு தலங்களின் மூலம் தீவிரவாத கருத்துக்களை பரப்ப பயன்படுத்தப்படுகிறது. இது இஸ்ரேலிடம் செல்லு படி ஆகாது. அவன் கொடுக்க வேண்டிய அளவில் சரியாக கொடுக்கிறான்.


ram
செப் 10, 2025 11:17

தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேல் மக்களை கொல்லும்பொது எந்தவித கண்டனமும் வாராது அப்போது கடவுள் மிக பெரியவன் என்று சொல்லி கொண்டு குதிப்பார்கள், அவர்கள் திருப்பி அடிக்கும் பொது கண்டனம் என்ன லாஜிக்கோ.


ram
செப் 10, 2025 11:15

இந்த குறிப்பிட்ட மதத்தினர் எப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக மாறுகிறாரோ அப்போதுதான் இதுபோல சண்டைகள் குறையும்.


Anand
செப் 10, 2025 11:10

//தங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது// அப்படியானால் அவர்களை அழிக்கும்வரை கத்தார் மீது தாக்குதல் நடத்தப்படும்.


Sekar
செப் 10, 2025 10:47

என்னை பொறுத்தவரை இஸ்ரேல் என்றால் அமெரிக்கா. கத்தார் அமெரிக்கா அதிபருக்கு பரிசாக கொடுத்த போயிங் ரக விமானங்கள் ஏனோ நினைவுக்கு வருகிறது.


Kulandaivelu
செப் 10, 2025 10:26

ஹமாஸ் அமைப்பின் விளைவுகளை பற்றி யோசிக்காத செய்கைகளால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளே. ஹமாஸ் இஸ்ரேல் எதிர்க்க முடிவு செய்து விட்டால் நேரடியாக களத்தில் இறங்க வேண்டும். நேரடியா மோத வேண்டும் அல்லது மற்ற நாடுகளின் ஆதரவுடன் போர் செய்ய வேண்டும். இல்லை என்றால் ராஜாங்க ரீதியில் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் கொல்லப்படுவது அப்பாவி மக்களே. இது இரண்டு நாடுகளுக்கு மட்டும் உள்ள பகை மட்டும் அல்ல. இது மற்ற வளர்ந்த நாடுகளின் சூழ்ச்சியான எண்ணகளே. இங்கே ஹமாஸ் அரபு நாடுகளின் அடியாள். இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் ஆதரவுடான் மக்களை கொள்கிறது.


சமீபத்திய செய்தி