உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாக சம்பவம்: கேரளாவில் இஸ்ரேல் தம்பதிக்கு அவமதிப்பு

பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாக சம்பவம்: கேரளாவில் இஸ்ரேல் தம்பதிக்கு அவமதிப்பு

திருவனந்தபுரம்: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தம்பதியினரை கேரளாவில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் நுழைய விடாமல் வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.சுற்றுலாத்தளமான தேக்கடியில் பல நாட்டை சேர்ந்தவர்கள் வந்து செல்வர். இங்கு வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. காஷ்மீரை சேர்ந்த 2 பேர் தேக்கடியில் கைவினை பொருள் விற்கும் கடை நடத்தி வருகின்றனர் . இங்கு இஸ்ரேல் தம்பதியினர் ஆர்வமாக ஷாப்பிங் செய்ய வந்தனர். ஆனால் ' நீங்கள் எந்த நாட்டவர்கள் என கடைக்காரர்கள் விசாரித்தனர். இஸ்ரேல் என தெரிந்ததும் கடைக்குள் வர வேண்டாம், பாலஸ்தீன முஸ்லிம்களை சிரமப்படுத்துகிறீர்கள் , நாங்கள் அவரது ஆதரவாளர்கள் என கூறினர்.இதனை கேட்ட இஸ்ரேல் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.' நாங்கள் பொருட்கள் வாங்க தான் வந்திருக்கிறோம், ஹிந்து, கிறிஸ்து, இஸ்லாமியர், என வேறுபாடு நினைப்பதில்லை. இந்தியர்கள் போல் நடந்து கொள்ளுங்கள், இந்திய கலாசாரத்தோடு நடந்து கொள்ளுங்கள், இது இந்தியாவில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. ' என காரசார விவாதம் செய்தனர். தொடர்ந்து அங்கு கூடிய நபர்களும் இஸ்ரேல் தம்பதியினருக்கு ஆதரவு அளித்து குரல் கொடுத்தனர். இதனைய டுத்து கடைக்காரர்கள் மன்னிப்பு கோரினர். பின்னர் ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சவுதியில் கேரள தம்பதி மர்ம மரணம்

சவுதி அரேபியாவில் கேரள தம்பதியினர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். உடல்களை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கொல்லம் மாவட்டம் கடக்கல்லை சேர்ந்த சரத் 40, இவரது மனைவி பிரீத்தி 32. சரத் சவுதியில் 2 வருடங்களாக பிளம்பராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியை சவுதி அழைத்து வந்துள்ளார். உனைஷா என்ற பகுதியில் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தனர். பொருளாதார ரீதியில் ஏதும் பாதிக்கப்பட்டார்களா அல்லது கணவன் மனைவி இடையே தகராறு ஏதும் இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

G Sundar
நவ 17, 2024 06:04

வணக்கம் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவின் விருந்தினர்கள் அவர்கள் மிக நல்ல அனுபவங்களையும் சந்தோஷமான நாட்களை அனுபவித்து சுற்றுலா முடிந்து இனிமையான நினைவுகளோடு இந்தியாவிளிருந்து விடைபெறவேண்டும் அவர்களால் சுற்றுலாத்துறை வளரும் அவர்களின் சொந்த பணத்தை செலவு செய்து நமது நாட்டை வளப்படுத்துகிறார்கள் நமது எஜமானர்கிறார்கள் அதை விடுத்து அவர்களை மத ரீதியாக மன உளைச்சல் செய்து அனுப்பினால் நிச்சயம் அவர்கள் திரும்ப வரமாட்டார்கள்


G Sundar
நவ 17, 2024 06:04

வணக்கம் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவின் விருந்தினர்கள் அவர்கள் மிக நல்ல அனுபவங்களையும் சந்தோஷமான நாட்களை அனுபவித்து சுற்றுலா முடிந்து இனிமையான நினைவுகளோடு இந்தியாவிளிருந்து விடைபெறவேண்டும் அவர்களால் சுற்றுலாத்துறை வளரும் அவர்களின் சொந்த பணத்தை செலவு செய்து நமது நாட்டை வளப்படுத்துகிறார்கள் நமது எஜமானர்கிறார்கள் அதை விடுத்து அவர்களை மத ரீதியாக மன உளைச்சல் செய்து அனுப்பினால் நிச்சயம் அவர்கள் திரும்ப வரமாட்டார்கள்


Thiyagarajan S
நவ 15, 2024 17:26

அந்தக் கடைக்காரரின் வர்த்தக உரிமை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்


Ashok Kumar
நவ 15, 2024 08:27

இஸ்ரேல் தம்பதிகளுக்கு அவமதித்தது, தவறான செயலாகும். அதற்க்கு அங்குள்ள நம் மக்கள் மன்னிப்பு கோரா செய்தது கிரேட்


Palanisamy T
நவ 14, 2024 20:19

கடைக்காரன் செய்தது பெரிய தவறு. இந்தச் செயல் கடைக்காரனால் வாடிக்கையாளரின் மேல் சுமத்திய வேண்டாத சம்பவம். கடைக்காரன் தேவையில்லாமல் இதை மதச் சம்பவமாக்கிவிட்டான். இந்தச் செயல் இந்திய நாட்டின் நற்ப்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியச் செயல். இந்தியாவில் இப்படி நடக்குமென எதிர்ப்பார்க்கவில்லை யென்று அந்த சுற்றுப் பயணிசொன்னதில் உண்மையுண்டு. கடைக்காரரின் இந்தச் செயல் சரியா தவறாயென்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும்.


Barakat Ali
நவ 14, 2024 20:09

இஸ்ரேல் இந்தியாவிடம் விளக்கம் கேட்கவேண்டும் .....


பேசும் தமிழன்
நவ 14, 2024 19:21

காஷ்மீர் ஆட்களை காஷ்மீர் மாநிலத்துக்கு விரட்டி அடிக்க வேண்டும்..... அவர்களுக்கு நமது நாட்டின் மீதான அபிப்பிராயம் என்னவாகும் என்று நினைக்கவில்லை..... அவர்களுக்கு மதம்..... என்ற.. மதம் பிடித்து இருக்கிறது போல் தெரிகிறது.


Sathyanarayanan Sathyasekaren
நவ 14, 2024 20:00

பேசும் தமிழன், தவறான கருது காஷ்மீரிகளை அல்ல கத்திக்கு பயந்து அந்நிய நாட்டு மதத்திற்கு மாறி ஹிந்துக்களுக்கு இந்தியாவிற்கு எதிராக நடந்துகொள்ளும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களை அவர்கள் ஆதரவு கொடுக்கும் நாடுகளுக்கு உதாரணமாக பாலஸ்தீனத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும்.


Natarajan Ramanathan
நவ 14, 2024 18:38

அவன் தாடியில் நெருப்பு வைத்துவிடவேண்டும்


Ramesh Sargam
நவ 14, 2024 17:58

இந்தியாவில் இந்தியர்கள் போல நடக்க விருப்பம் இல்லாதவர்கள், இந்திய நாட்டை விட்டு உடனே வெளியேறவேண்டும்.


Yaro Oruvan
நவ 14, 2024 17:50

அவுக்க நம்ம நாட்டை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்.. அந்த எண்ணத்தோட பாருங்கடா.. மதம் மதம்னு மதம் புடிச்சு அலையுறானுவ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை