உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 50 பேர் சுட்டுக்கொலை

இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 50 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் 50 பேர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நுழைந்து பொதுமக்கள் 984 பேர் உள்பட 1,970 பேரை படுகொலை செய்தனர். இதையடுத்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 47,417 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மேற்கு கடற்கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 கட்டடங்கள் தரைமட்டமானது. ஒரே நேரத்தில் ஏராளமான குண்டுகளை வீசி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பகுதி புகை மூட்டமாகக் காட்சி அளித்தது. உள்ளூர் தீவிரவாத அமைப்பினரின் மறைவிடங்கள் மற்றும் ஆயுதப் பதுக்கல் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜெனின், துல்கரேம் மற்றும் தமுன் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் 50 பேர் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் பாலஸ்தீனர்கள் 100 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சிறை பிடித்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sampath Kumar
பிப் 03, 2025 17:19

போர் நிறுத்தம் என்று அறிக்கை விட்டார்கள் இப்போ தாக்குதல் இந்த இஸ்ரேல் காரன் பேச்சு நம்ம ஊரு அரசியில் வியாதிகளை விட மோசம் போல தெரிகிறது இவனுக கும்புடுகிற தெய்வம் யாரு என்பதிலும் குழப்பம் உள்ளது இந்த குழப்பவியாதிகள் தான் உலகின் மிக சிறந்த ராஜ தந்திரி களாம் இந்த வழி தோன்றல்கள் தான் நம்ம ஊரு அறிவில் ஆதவர்கள் என்று பீத்தி கொள்ளும் ஒரு கும்பல் இந்த கும்பலின் கையில் உலகம்சிக்கி சீரழிந்து வருகின்றது இதை உலக மக்கள் உணரும் வேலை வந்து விட்டது இனி நிச்சயம் நாடாகும் மூன்றாம் உலக போர்


Nagendran,Erode
பிப் 03, 2025 18:59

போலி பெயரில் கருத்தை போடும் மூர்க்கனே எதனால் இந்த போர் ஆரம்பித்தது எதற்காக இஸ்ரேல் காஸா மீது குண்டுமழை பொழிகிறது என்பதை தெரிந்து கொண்டு கருத்தை பதிவிடு.


rajasekaran
பிப் 03, 2025 12:33

இந்த போர் எதனால் யாரால் ஆரம்பிக்க பட்டது. அமைதி மார்க்கம் பலஸ்தீனர்களால் வளர்க்கப்பட்டு அவர்கள் ஆதரவோடு ஹமாஸ் தீவிரவாத கும்பலால் ஆரம்பிக்கப்பட்டது. எந்த ஒரு நாடாவது அல்லது அங்குள்ள மக்கள் ஹமாஸ் செய்வது தவறு என்று யாரும் கூறவில்லை. என்ன செய்வது. மாறாக லோக்கல் மக்கள் ஹமாஸுக்கு உறுதுணையாக உள்ளார்கள். ஹமாஸ் நகரம் இன்னமும் அழிய வேண்டும்.


சுலைமான்
பிப் 03, 2025 11:03

இந்த அடியை அலி கொமேனிக்கு அடித்தால் அடங்கி விடுவான்.... தீவிரவாதமே முற்றிலும் ஒழிந்து விடும்.


Anand
பிப் 03, 2025 10:50

காசாவை தொடர்ந்து மேற்கு கரையும் தரைமட்டம் ஆகிவிடும் போல தெரிகிறது, ஒருவேளை அப்படி ஆனாலும் வெற்றி வெற்றி என மூர்க்க கூமுட்டைகள் கூவி கூவி புளங்காகிதம் அடைவர், என்ன மூளையோ...


Kumar Kumzi
பிப் 03, 2025 13:57

மூளையா ஹாஹாஹா


Kasimani Baskaran
பிப் 03, 2025 10:50

ஈரானை ஒரு 50 வருடம் பின்னோக்கி செலுத்துமளவுக்கு அடித்து நொறுக்கியிருந்தால் தீவிரவாதம் அடியோடு ஒழிந்திருக்கும். சாம்பிளுக்கு அடித்தால் அவர்கள் திருந்த வாய்ப்பில்லை.


நரேந்திர பாரதி
பிப் 03, 2025 10:27

என்னங்க? இன்னும் அங்க தீவாளி முடியலையா?


kantharvan
பிப் 03, 2025 15:16

இதே மாதிரி பிதற்றி கொண்டு இறுமாப்புடன் இருந்தவர்களே லாஸ் ஏஞ்சலீஸில் எரிந்து சாம்பலாகி போனார்கள். முன் இட்ட தீ பின் கொழுந்து விட்டெரியும் என்பதை அறியாதவனா பாரதீ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை