மேலும் செய்திகள்
ஐ.நா.,வில் முதல்முறையாக ஹிந்தியில் புத்தாண்டு வாழ்த்து
2 hour(s) ago
ஜெருசலேம்: அமைதிக்காக நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு இஸ்ரேல் ஆறுதல் பரிசு அறிவித்துள்ளது. உலக நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தி வரும் தனக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இவரின் பெயரை பரிந்துரை செய்த நிலையிலும், அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை. இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் உயரிய குடிமகன் விருதான, 'இஸ்ரேல் பரிசு' அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். 'அமைதி' பிரிவில் முதன்முறையாக, இஸ்ரேல் அல்லாத ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து நெதன்யாகு கூறுகையில், ''அமெரிக்க அதிபர் டிரம்ப் பல மரபுகளை உடைத்து உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார். ''அதனால் நாங்களும் ஒரு மரபை உடைக்க முடிவு செ ய்தோம். 80 ஆண்டுகளில் முதன்முறையாக இஸ்ரேலின் உயரிய விருதை டிரம்புக்கு வழங்க உள்ளோம். இஸ்ரேல், யூத மக்களுக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காக வழங்கப்ப டுகிறது,'' என்றார். அடுத்தாண்டு இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் அதிபர் டிரம்ப் இந்த விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 hour(s) ago