உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்

காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.மேற்காசியா நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் தலையீட்டால் தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 59 பேரை விடுவிக்க மறுத்துள்ளனர். இதனால் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதலை துவங்கியுள்ளது.

காசாவின் 50 சதவீத பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் காசாவில், அதன் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கான திட்டத்தை பிரதமர் நெதன்யாகுவிடம் சமீபத்தில் தெரிவித்தது.இதன்படி, காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் அமைச்சரவை நேற்று இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MUTHU
மே 06, 2025 08:59

பழைய வரலாற்று நிகழ்வுகள் என்னவாக இருந்தாலும் தற்போதைய போர் ஆரம்பிப்பதற்கு முன் காசா முற்றிலும் சுயாட்சி கொண்ட பகுதியாய் விடப்பட்டு விட்டது. இஸ்ரேல் எவனும் எப்படியும் போறான் என்ற மன நிலையிலேயே இருந்தது. அதனாலே இவ்வளவு சுரங்கம் மறைவிடம் மற்றும் போர் கட்டமைப்புகளை காசாவால் உருவாக்க முடிந்தது. சின்வார் போன்றோர் தங்கள் மக்களிடம் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை உருவாக்கம் செய்ததையும் இஸ்ரேல் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் இரு பகுதிகளுக்கும் தெளிவான வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு உருவாக்கிவிடப்பட்டது. அதனால் தங்களுக்கு எந்தப்பாதிப்பும் காசா உருவாக்காது என்று நம்பினார்கள். காசா மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏதாவதொரு பிரச்சனைகளை எல்லைப்பகுதிகளில் முன்னெடுத்தாலும் அதுவும் பாலஸ்தீன பகுதிகளுக்கான பிரச்சினைகளைப்பற்றியதாய் மட்டுமே இருந்தது. தங்கள் காசா பகுதிக்கானதாய் முன்னெடுக்கவில்லை. அதனாலும் இஸ்ரேல் எந்த கவலையும் கொள்ளவில்லை. இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் காசா ஐக்கிய நாடுகளில் தனி நாடு என்ற முத்திரைக்கான நகர்வுகளில் இருந்ததை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மறைமுகமாய் ஊக்குவிக்கவே செய்தன. இவர்களுக்கு தான் நல்லது கேட்டது புரியாதே. வெண்ணை திரளும் பொழுது தாழியை உடைப்பதை போன்று காரியத்தை கெடுத்து விட்டது காசா தலைமை. இப்பொழுது முதலுக்கு மோசமாய் போய் விட்டது.


Sivak
மே 06, 2025 11:00

சிறப்பான தகவலுக்கு நன்றி ...


மீனவ நண்பன்
மே 06, 2025 08:22

ஈரானும் கத்தாரும் வளத்துவிடறாங்க


GMM
மே 06, 2025 07:04

காசாவை இஸ்ரேல், ஆக்கிரமிப்பு காஸ்மீர் இந்தியா, கனடாவை அமெரிக்கா கைப்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். உலகில் பாதி தீவிரவாதம் ஒழியும் .


raja
மே 06, 2025 06:08

சூப்பர் வீரண்டா நெதென்யாஹு வீரண்டா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை