உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதல் காசாவில் 93 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதல் காசாவில் 93 பேர் பலி

காசா: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023ல் துவங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. காசா முனையின், டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் நகரங்களின் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில், 93 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய நிலையில், வடக்கு காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை