உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ரத்து

 இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ரத்து

ஜெருசலேம்: டி ல்லி கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தியப் பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு, அடுத்த மாதத்தில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தார். சமீபத்தில், தலைநகர் டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அவரது வருகை இந்தாண்டு மட்டும் மூன்று முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைசியாக, 2018ல் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை