மேலும் செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு விருந்து
2 minutes ago
ரூ.2,500 கோடி போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டவர் கைது
36 minutes ago
ஜெருசலேம்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எஞ்சிய, 5,800 யூதர்களையும் அழைத்து வருவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த பினே மெனாஷே சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக மிசோரம் மற்றும் மணிப்பூரில் வசித்து வருகின்றனர். இவர்களை மீண்டும் இஸ்ரேலுக்கு குடிபெயரச் செய்வதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், 1,200 பேர், 2026ம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேல் குடிபெயர உள்ள நிலையில் எஞ்சிய, 5,800 பேரை அழைத்துக் கொள்வதற்கான திட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட, 4,000 பேர் ஏற்கனவே இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அழிந்துபோன, 10 வம்சாவளியினரில் ஒரு வம்சாவளியினரின் வாரிசுகள் இவர்கள் என கூறப்படுகிறது.
2 minutes ago
36 minutes ago