உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் 21 மாதமாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது

காசாவில் 21 மாதமாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது

காசா: பாலஸ்தீனத்தின் காசாவில் கடந்த 21 மாதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில், இஸ்ரேலை சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் ராணுவம், விமானப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இடையில் கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அதனை கடைபிடிக்கவில்லை என இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டின. இதனையடுத்து மீண்டும் போர் துவங்கியது. இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தற்போது இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், போரை நிறுத்துவதற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தப்படும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை ஏற்காத ஹமாஸ் அமைப்பினர், தங்கள் பிடியில் உள்ள எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராக உள்ளதாக மட்டும் கூறினர். இதனால், போர் நிறுத்தம் ஏற்படுவதில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தண்ணீர் பிடிக்கும் இடத்தில் இருந்த 6 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிவாரண மையங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 28 பேர் உட்பட 59 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். கடந்த 21 மாதமாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

c.mohanraj raj
ஜூலை 14, 2025 14:10

ஒருத்தனாவது பயங்கரவாதத்தில் தான் இந்த அழிவு என்று எவனும் கூறுவதில்லை முழுசாக அழிப்பதே நல்லது


JaiRam
ஜூலை 13, 2025 20:49

பாலஸ்தீனியர்கள் பயங்கரவாத்தை கைவிட வேண்டும். ஆனால் வயிறு நிரம்பியதும், பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், மரணம் நிச்சயம்.


தாமரை மலர்கிறது
ஜூலை 13, 2025 19:46

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்களை பிற அரபுநாடுகள் ஏற்றுக்கொண்டால், பாலஸ்தீனியர்கள் உயிர்தப்பிக்க வாய்ப்புள்ளது. பாலஸ்தீனியர்களாலும் பயங்கரவாத்தில் ஈடுபடாமல் இருக்க முடியாது. அவர்களை கொல்லாமல் இஸ்ரேலும் விடாது. இப்படியே போனால், இன்னும் ரெண்டு வருடத்தில் பாலஸ்தீனியர் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதை உணர்ந்து பாலஸ்தீனியர்கள் பயங்கரவாத்தை கைவிட வேண்டும். ஆனால் வயிறு நிரம்பியதும், பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், மரணம் நிச்சயம்.


மனிதன்
ஜூலை 13, 2025 20:42

பாலஸ்தீனியர்கள் எங்கப்பா பயங்கரவாதம் பண்ணுறாங்க? இஸ்ரேல் பண்ணுறது தான் பயங்கரவாதம் அவன் நாட்டை பிடித்துக்கொண்டு அவனையையே வெளியேற்றப்பார்க்கிறான் குழந்தைகளை கொத்து கொத்தாக கொள்கிறான்.


JaiRam
ஜூலை 13, 2025 20:50

மாவீரன் நெதன்யாகு


SUBBU,MADURAI
ஜூலை 14, 2025 04:17

நாட்டுக்கு துரோகம் பண்ணும் து....ளை முதலில் போட்டுத்தள்ள வேண்டும் அப்போதுதான் உலகில் அமைதி நிலவும்.


என்றும் இந்தியன்
ஜூலை 13, 2025 19:03

இஸ்ரேல் மாதிரி நாமும் இருந்தால் தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் கொஞ்சம் பயந்து நம்மிடம் மரியாதையாக நடந்து கொள்ளும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை