உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினமே

உடல் பருமன், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வது கடினமே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க விசாவுக்கு வெளிநாட்டினர் விண்ணப்பிக்கும் போது, விரிவான உடல் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, அமெரிக்க வெளியுறவு துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, விசா பெறுவது மேலும் கடினமாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல், குடியேற்ற நடைமுறைகளில் கெடுபிடி காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் 'எச்1பி' விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ntd0qgm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்ததாக தற்போது, அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு, விரிவான உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு துறை தன் துாதரகங்கள் மற்றும் துணை துாதரகங்களுக்கு அனுப்பியுள்ள ரகசிய சுற்றறிக்கையில், 'விசா கோரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் மதிப்பிடும் போது, விண்ணப்பதாரரை மிகவும் விரிவான உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதயம், சுவாசம், புற்று நோய், நீரிழிவு, வளர்சிதை மாற்றம், நரம்பியல் மற்றும் மனநலம் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழிக்கக் கூடியவர்களா என்பதை, விசா அதிகாரிகள் மதிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர் அரசின் உதவியை நாடமாட்டார் அல்லது அரசு செலவில் நீண்ட கால மருத்துவ பராமரிப்புக்கு செல்லமாட்டார் என்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இந்த புதிய நடைமுறையின்படி, உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டோரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Raj
நவ 09, 2025 12:49

பெருவாரியான அமெரிக்கர்கள் குழந்தைகள் உட்பட குண்டர் படை என்று சொல்லும் அளவிற்கு உடல் பெருத்தவர்கள். மெக்டொனால்ட், பிசா ஹட் போன்ற விரைவு உணவகங்களில் ரெடிமேடு விரைவு உணவை உண்டு உடல் பெருத்தவர்கள். வியாதிகளின் இருப்பிடம். மொத்த அமெரிக்கர்களுக்கும் ட்ரம்ப் உட்பட யாருக்குமே எந்த வெளினாட்டிற்கும் செல்லவும் விசா கொடுக்கக் கூடாது.


N Srinivasan
நவ 09, 2025 10:56

அடுத்த கண்டிஷன் கருப்பாய் இருந்தால் கிடையாது பெண்கள் அழகாய் இல்லை என்றால் கிடையாது என்று


bharathi
நவ 09, 2025 10:09

Good not to travel to America when you have sickness. Treatment is a big challenge


Ramesh Trichy
நவ 09, 2025 09:44

When you get down from an International flight in America, you can only see people with XXL & XXXL sizes.


Swaminathan L
நவ 09, 2025 09:22

விசாவுக்கு விண்ணப்பிக்கையில் மருத்துவக் காப்பீட்டு ஆவணமும் டிக்கெட்டும் அங்கே தங்குவதற்கான ஏற்பாடு ஆவணமும் தந்து விடுகிறோம். மருத்துவக் காப்பீட்டுத் தொகை குறைந்தது ஒரு லட்சம் டாலர் அல்லது அதற்கு மேற்பட்டு இருக்கும் நிலையில் விசா வழங்குவது வரி.


naranam
நவ 09, 2025 09:20

ஆஹா! இது போல அனைத்து நாடுகளும் முடிவெடுத்து விட்டால் பெரும்பாலான மக்கள் வெளி நாடுகளுக்குச் செல்லமுடியாமல் போய்விடும். உள்நாட்டுப் பிரயாணம் அதிகரிக்கும். விமான நிறுவனங்கள் ஏர்லைன்ஸ் ஆகியவற்றிற்கு மூடுவிழா செய்து விடலாம்.. சிறப்பு..


Balasubramanian
நவ 09, 2025 08:15

அடுத்தது கை கால்களில் ஐந்து விரல்கள் உள்ளவர்கள் வரக் கூடாது என்பார்களோ?


rama adhavan
நவ 09, 2025 07:32

இது வதந்தி. விண்ணப்ப படிவத்தில் இல்லாத கேள்விகளை துதரக அதிகாரி கேட்க மாட்டார்.


raja
நவ 09, 2025 12:05

அதான் ரகசிய வாய் வழி உத்தரவு என்று செய்தியில் உள்ளதே ..


Ramesh Sargam
நவ 09, 2025 07:25

அவர்கள் குறிப்பிட்ட அத்தனை பிரச்சினைகளும் அமெரிக்கர்களுக்கே அதிகம். அவர்களை துரத்திவிடுவாரா டிரம்ப் அவர்கள்? அமெரிக்கர்களின் நிலை இன்று - குரங்கு கையில் பூ மாலையை கொடுத்துவிட்ட நிலை.


சண்முகம்
நவ 09, 2025 06:40

பணம் இருக்கோ இல்லையோ, அவசர சிகிச்சை அளித்தே ஆக வேண்டும் என்பது அமெரிக்காவின் சட்டம். வெளிநாட்டினர் ஒருவர் மாரடைப்பு என்று மருத்துவ மனை சென்றால் பணம் இல்லாவிட்டாலும் சிகிச்சை அளித்தாக வேண்டும். இம்மாதிரி அவசர சிகிச்சை சர்வ சாதாரணமாக 1,00,000 டாலர் (₹88,00,000) ஆகும். இந்த செலவு அமெரிக்க குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்படும். வெளிநாட்டவருக்கு அமெரிக்கர்கள் ஏன் செலவு செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை