உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ஷிகெரு இஷிபா

ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ஷிகெரு இஷிபா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாக ஷிகெரு இஷிபா அறிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g46ofdkg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த பார்லியின் மேலவை தேர்தலில் இந்த கட்சிக்கு தோல்வி கிடைத்தது. இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்து விட்டது.இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.கடந்த ஒரு மாதமாக இவ்வாறு கூறப்படும் கருத்துக்களை பிரதமர் புறக்கணித்து வந்தார். ஆனால், நாளுக்கு நாள் அவரது ராஜினாமாவை கோரும் குரல்கள் வலுத்து வருகின்றன.குறிப்பாக, அவரது கட்சியில் இருக்கும் வலதுசாரிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், கட்சி தலைமைப்பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்பது பற்றி நாளை லிபரல் டெமாக்ரடிக் கட்சி முடிவு செய்ய உள்ளது.அதை கட்சியின் நிர்வாகிகள் அங்கீகரிக்கும் பட்சத்தில், ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டியிருக்கும். அதை தவிர்க்கும் நோக்கத்தில், அவர் தானாகவே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

முதல் தமிழன்
செப் 07, 2025 15:35

சென்ற முறை நமது பிரதமர் அங்கு சென்று வந்தார். இந்த முறையும் சென்று வந்தார். வாழ்த்துக்கள்.


VSMani
செப் 07, 2025 14:12

ஜப்பானியர்கள் நாட்டு பற்று மிக்கவர்கள். நாட்டிற்காக எதையும் செய்வார்கள். ஆனால், நம் மாநிலத்தின் முதல்வர்கள் சாகும்வரை அந்தபதவியை விடமாட்டார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 07, 2025 13:20

ஜப்பானில் பிரதமர் பதவி விலகுவது தினமும் டீ குடிப்பது போல. வருஷத்துக்கு ரெண்டு பிரதமர்கள் வருவார்கள், போவார்கள். அவ்வளவு ஒற்றுமை அங்கே. நம்ம சப்பான் துணை முதல்வரை அனுப்பி வைத்தால் இன்னும் அம்பது வருடத்துக்கு நகராமல் உக்காந்துக்குவார்.


ديفيد رافائيل
செப் 07, 2025 13:12

இந்தியாவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் வரை பதவி விலக மாட்டார்கள்.


SANKAR
செப் 07, 2025 20:13

These things can happen only in MATURE democracies like Japan.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை