உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் சைவ உணவு வேற லெவல்; துணை அதிபராகும் இந்திய மருமகன் ஜே.டி.வேன்ஸ் ஓபன் டாக்

இந்தியாவின் சைவ உணவு வேற லெவல்; துணை அதிபராகும் இந்திய மருமகன் ஜே.டி.வேன்ஸ் ஓபன் டாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'இந்தியாவின் சைவ உணவு சிறந்தது. இந்தியாவின் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுங்கள்' என துணை அதிபராகும் இந்திய மருமகன் ஜே.டி.வேன்ஸ் தெரிவித்தார்.அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, வெற்றி பெற்றார். இவரின் மனைவி உஷா சிலுகுரி, 38, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1986ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இதனால், துணை அதிபர் ஜே.டி.வேன்சை இந்தியாவின் மருமகன் என இங்கு உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் பிறந்த உஷா, யேல் பல்கலையில் சட்டம் பயின்றார். அங்கு அறிமுகமான ஜே.டி.வேன்சை காதலித்து 2014ல் திருமணம் செய்தார்.துணை அதிபராகும் இந்திய மருமகன் ஜே.டி.வேன்ஸ், இந்தியாவின் உணவு வகைகள், மனைவி உஷா சமைத்து தரும் உணவுகள் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: எனது மனைவி இந்திய- அமெரிக்கர். அவள் செய்யும் சைவ உணவு விதிவிலக்கானது. நான் உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் சைவ உணவுகளை எடுத்து கொள்ள விரும்பினால், இந்திய உணவு வகைகளை பின்பற்றுங்கள். இது சுவையாக இருக்கிறது. அரிசியில் செய்யும் உணவுகள், கொண்டைக்கடலையில் செய்யும் உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுங்கள். மேலும் சிறந்த பல வகையான உணவுகள் உள்ளது. இறைச்சியை விட இந்தியாவின் சைவ உணவுகள் சிறந்தது.

சுவையானது

நான் என் மனைவியை சந்திப்பதற்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் என்ன உணவுகளை தயாரித்து சாப்பிட்டார்கள் என்று தனக்கு தெரியாது. தனது மனைவி தனக்கு முதல் முறையாக சமைத்து தந்த சைவ உணவு மோசமாக தான் இருந்தது. சைவ உணவுகள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு சிறிது நேரம் ஆனது. ஆனால் உண்மையில் இந்திய உணவுகள் சிறந்தது, சுவையானது என்பதை உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆண்டின் துவக்கத்தில், 'கணவர் ஜே.டி.வேன்ஸ் சைவ உணவு வகைகளை ஏற்றுக்கொண்டார். இந்திய உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என தாயிடமிருந்து கற்றுக்கொண்டேன் என உஷா வேன்ஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Easwar Kamal
நவ 11, 2024 19:12

ரொம்ப இந்தியா என்று கொஞ்சி kullava வேண்டாம். நீங்கள் எவ்வளவு இந்திய மீது பாசத்தை காண்பீக்ரங்களோ அவ்வளவு ஆப்பு டிரம்ப் இந்தியாவுக்கு கொடுப்பார். மற்ற துணை அதிபர் போல இருக்கிற இடம் தெரியாமல் இருப்பது உங்களுக்கும் இந்தியாவுக்கும் நல்லது. ரொம்ப ஆட்டம் போட்டால் துணை அதிபரே இல்லாமல் அகி விடுவார். எப்படியும் பேருக்குத்தான் துணை மற்றபடி elan தன துணை அதிபர்.


என்றும் இந்தியன்
நவ 11, 2024 16:52

அப்போ 37 வயதிலிருந்து தான் உஷாவிற்கு கொஞ்சம் கொஞ்சம் சமையல் எப்படி செய்வது என்று தெரிந்ததா பேஷ் பேஷ் குழந்தாய். இந்த குழந்தை பிறந்தது அமெரிக்காவில் ஆனால் ஆந்திரா மகள்???வேன்ஸ் இந்திய மருமகன்??????


Gokul Krishnan
நவ 11, 2024 15:23

பதவி வந்தால் மருமகன் மச்சான் சின்னம்மா பெரியம்மா என்று எல்லா உறவும் வச்சு கூப்பிடுவீங்க


ஆரூர் ரங்
நவ 11, 2024 10:48

மாங்கா ஊறுகாய் செய்யவும் அறிந்திருப்பீர்கள். 200 க்களுக்கு எழுத மேட்டர் வேணுமே.


RAMAKRISHNAN NATESAN
நவ 11, 2024 10:27

உஷா இன்னமும் கிறிஸ்தவராக மதம் மாறவில்லையா ????


Apposthalan samlin
நவ 11, 2024 11:42

எனது பக்கத்து வீட்டுக்காரர் மகள் கல்யாணம் முடிந்து ஒன்பது வருசமா குழைந்தை இல்லை போகாத கோயில் இல்லை போகாத மருத்துவமனை இல்லை ஒரு நாள் சண்டே சர்ச்சிக்கு தம்பதி வந்தார்கள் அந்தமாதமே குழந்தை உண்டாகி ரெட்டை பிள்ளை கிடைத்தது .உடனே அந்த குடும்பம் கணவரின் குடும்பம் ஆண்டவரை ஏற்று கொண்டார்கள் .


என்றும் இந்தியன்
நவ 11, 2024 16:39

எனது பெரியப்பாவின் பேரன் காது வலியால் துடித்துக்கொண்டிருந்தான், எவ்வளவோ டாக்டர்களை பார்த்தான் பயனில்லை அவன் கிறித்துவனான் அவனுக்கு உடனே குணமாகிவிட்டது. அவன் கிறித்துவ பெண்ணை மணந்து கொண்டு இப்போது முற்றிலும் கிறித்துவனானான். அவன் உட்கொண்ட மாத்திரைகள் பலன் தர சிலகாலம் எடுத்தது அந்த நேரத்தில் அவன் மத மாற்றம் செய்து கொண்டான். அவ்வளவே உண்மை. கிறித்துவன் ஆனதால் அது சரியாகவில்லை. அப்போ ஒரு கிருத்துவன் கூட உடல்நிலை சரியில்லாமல் இருப்பதில்லை, இறப்பதில்லை என்ற புருடா வேண்டாம். இதே மாதிரித்தான் இப்போது புட்டபர்த்தி சாய்பாபா ஷீரடி சாய்பாபா .........................பற்றியும் பலர் டூப் விட்டுக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் குணமாகும் என்று இருந்தது குணமாகிவிட்டது அவ்வளவே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை