உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென்கொரிய அதிபர் யூன் சுக் லியோல் பதவி நீக்கம் உறுதி: 60 நாட்களில் புதிய தேர்தல்!

தென்கொரிய அதிபர் யூன் சுக் லியோல் பதவி நீக்கம் உறுதி: 60 நாட்களில் புதிய தேர்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கத்தை, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இதற்கிடையே, ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது; இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், இவர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், 'தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ராணுவ சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு வந்த பிறகு ஆர்ப்பாட்டக் காரர்கள் வீதிகளில் கொண்டாடி ஆரவாரம் செய்தனர். 60 நாட்களில் புதிய அதிபரை தேர்வு செய்ய தேர்தல் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nada Rajan
ஏப் 04, 2025 17:33

தென்கொரியா அதிபர் சுற்றி சுற்றி குறி வைக்கப்படுகிறார்... அவர் ஒரு சட்டத்தை ஏற்றிவிட்டு மன்னிப்பு கேட்டாலும் குற்றம் போல் பார்க்கிறார்கள்


முக்கிய வீடியோ