உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் ரேஸில் முந்துகிறார் கமலா ஹாரிஸ்: டிரம்ப் அதிர்ச்சி

அதிபர் ரேஸில் முந்துகிறார் கமலா ஹாரிஸ்: டிரம்ப் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ள கமலா ஹாரீஸ் முன்னிலையில் உள்ளார். இது குடியரசு கட்சி சார்பில் களமிறங்கி உள்ள டிரம்ப் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் களமிறங்கினர். இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட விவாதத்தில் பைடன் பின்தங்கினார். பிறகு உடல்நலக்குறைவு காரணமாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரீஸ் களமிறங்கி உள்ளார். இதனையடுத்து அங்கு நிலைமை மாறி உள்ளது. இதுவரை கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் முன்னிலை பெற்ற நிலையில் தற்போது கமலா ஹாரீஸ் முன்னிலை பெற்றுள்ளார்.அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கக்கூடும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் ஆக.,5 முதல் 9ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கமலா ஹாரீசுக்கு 50 சதவீதம் பேரும், டிரம்ப்பிற்கு 46 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பென்சில்வேனியாவில், எந்தக் கட்சியையும் சாராதவர்கள் அதிகம் பேர் கமலா ஹாரீசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். தனது துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸை, கமலா ஹாரீஸ் அறிவித்ததற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. இந்நாள் வரை இந்த மாகாணங்களில் டிரம்ப்பிற்கு ஆதரவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ram Thevar
ஆக 12, 2024 08:56

தமிழக ஆர் எஸ் பாரதி மீடியாக்களை நம்ப வேண்டாம் என்னுடைய அமெரிக்க நண்பர் சொன்னார் டிரம்பு தான் வெற்றி பெறுவார் என்று


R Kay
ஆக 12, 2024 02:09

டிரம்ப் ஜெயித்தால் இந்தியாவிற்கு நல்லது


யுவராஜ்
ஆக 12, 2024 00:08

அப்படி எல்லாம் தேவை இல்லை விடியல் கிட்ட கத்துக்கிட்டு இங்கிலிஷ் தப்பு தப்பா பேசினாலே போதும் சுலபமாக வெற்றி பெறலாம்


Sundar
ஆக 11, 2024 22:46

அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும்பாலும் கமலா ஹாரிஸுக்குதான் வாக்களிப்பார்கள். பிரச்சனை இங்குதான்


R Kay
ஆக 12, 2024 02:08

இவர் ஒன்றும் இந்தியரல்ல. இந்தியாவிற்கு எதிரானவர்.


venugopal s
ஆக 11, 2024 21:33

டிரம்ப் நமது மத்திய பாஜக அரசிடமிருந்து இ வி எம் மெஷின்களை வாங்கி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற பயன்படுத்தலாமே!


R Kay
ஆக 12, 2024 02:07

குடும்ப கொத்தடிமை ஹவாலா உபி ஓசி குவாட்டர் பிரியாணி இப்படித்தான் யோசிக்கும். துணியை மட்டும் சலவைக்கு போடு. மூளையையும் சேர்த்துப்போடாதே


Kavi
ஆக 11, 2024 20:49

Trump will win always western media is a number one fraud


Corporate Goons
ஆக 11, 2024 20:15

இழந்தது இந்தியா


Kumar Kumzi
ஆக 11, 2024 19:01

கமலாம்மாவுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு


rama adhavan
ஆக 11, 2024 19:58

சரியான கருத்து. இந்தியாவில் மீடியாகள் மோடிக்கு எதிர். அதுபோல் அமெரிக்காவில் மீடியாகள் டிரம்ப்க்கு எதிர். எனவே இதுபோன்ற பொய் வதந்தியை டன் கணக்கில் நொடிக்கு நொடி தேர்தல் வரை பரப்புவார்கள். கேட்டால் இந்த மாநிலத்தில், அந்த மாநிலத்தில் என்பார்கள். இன்று வரை கமலாவுக்கு வாய்ப்பு இல்லை.


தத்வமசி
ஆக 11, 2024 18:49

இன்று வங்கதேசத்தில் நடைபெறும் அனைத்து கலவர்கங்களுக்கும் காரணம் இன்றைய அமெரிக்க அரசு. மீண்டும் இதே அரசு பதவிக்கு வந்தால் இந்தியாவுக்கு அதிகம் தொந்திரவு கொடுப்பார்கள். பொம்மை கட்சித் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்துப் போட்டு இந்தியாவில் அமைதி இல்லா நிலைமையை ஏற்படுத்துவார்கள்.


Kasimani Baskaran
ஆக 11, 2024 17:29

விவாதத்தில் டிரம்ப் ஏடாகூடமாக கேள்வி கேட்டால் கமலா ஹாரிஸை எளிதில் வென்றுவிட முடியும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை