உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காத்தடிக்குது… காத்தடிக்குது… கமலா ஹாரிஸ் திட்டத்துல காசிமேடு காத்தடிக்குது: 40 லட்சம் குடும்ப ஓட்டுக்கு குறி!

காத்தடிக்குது… காத்தடிக்குது… கமலா ஹாரிஸ் திட்டத்துல காசிமேடு காத்தடிக்குது: 40 லட்சம் குடும்ப ஓட்டுக்கு குறி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். உலக நாடுகளே எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக் கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=chowsjil&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர்.

கமலா அலை

ஜோ பைடன் தேர்தல் போட்டியில் இருந்த வரை டிரம்ப் முன்னிலை வகித்திருந்தார். ஆனால், கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ஜனநாயகக் கட்சியின் ஆதரவு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 10 சதவீதம் பேர் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக கூறி வந்த நிலையில், அது தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது.

ஆதரவு குறைவு

தற்போதைய சூழலில் டிரம்ப்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த வாக்காளர்கள் மாற்றுக் கட்சியை நோக்கி செல்ல இருப்பதாகவும், இதனால் டிரம்ப்புக்கான ஆதரவு குறையும் என்று அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

வீட்டுக்கு மானியம்

இந்த நிலையில், அமெரிக்க மக்களை கவரும் விதமாக, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார். அதாவது, முதல்முறையாக வீடு வாங்கும் மக்களுக்கு ரூ.21 லட்சம் வரையில் மானியம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

சூப்பர் அறிவிப்பு

அதாவது, வீடில்லாதவர்கள் பயனடையும் விதமாக, குறைந்த விலையில் வீடு கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, முன்வரும் கட்டுமான நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக ரூ.246 கோடி மாகாண நிர்வாகங்களுக்கு ஒதுக்கப்படும்.அதுமட்டுமில்லாமல், பொருளாதாரத்தின் பின்தங்கிய, முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு ரூ.21 லட்சம் வரையில் முன்தொகையாக செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலம் 40 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு மட்டும்

கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வாடகையை முறையாக செலுத்திய அமெரிக்கர்களே, இந்த திட்டத்தில் பயனடைய தகுதியானவர்கள்.இந்தியாவின் உந்துதல்கமலா ஹாரிஸ் முடிவு செய்துள்ள இந்த திட்டம் போலவே, இந்தியாவில் ஏற்கனவே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாவுக்கு அந்த திட்டங்கள் உந்துதலை தந்திருக்கவும் வாய்ப்புள்ளது.கமலா ஹாரிஸின் இந்த வீட்டு வசதித்திட்ட அறிவிப்பு அமெரிக்க மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தத்வமசி
ஆக 16, 2024 19:53

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இந்தியாவுக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா ? இந்தியாவின் எதிர்ப்பு நிலையில் இருப்பதாக தகவல். வங்கதேசத்தில் உள்ளே புகுந்து கலவரம் செய்யும் அமெரிக்க கூட்டம், அங்கிருந்த இந்துக்களை ஏன் காப்பாற்றவில்லை ? அது பற்றி ஏன் இன்னும் பேசவில்லை ?


அப்பாவி
ஆக 16, 2024 17:47

யாரு ஜெயிச்சாலும் அப்கே பார் அவிங்க சர்க்கார்னு கூவ ரெடியா இருக்கோம்.


Just imagine
ஆக 16, 2024 13:10

LOTUS கமலா அவர்களே, பெண்களுக்கு ஃபிளைட்டில் பயணம் இலவசம்,மாதம் 1000 டாலர் உரிமை தொகை, குடிக்க பீர் இலவசம்ன்னு வரிசையா அறிவிச்சிங்கனா.......... அடுத்த POTUS அதாங்க President of The United States நிச்சயம் நீங்க தான் ...


Balaji Gopalan
ஆக 16, 2024 12:23

எல்லா திட்டங்களும் இந்தியா வை பார்த்து copy அண்ட் Paste செயகிறார்கள்


அசோகன்
ஆக 16, 2024 12:14

மோடி திட்டம் செயல் படுத்தமட்டுமே ..... ஆனா இது திமுகவின் திட்டம் இலவசங்களை அள்ளிவிட்டு ஓட்டுக்களை அள்ளி பின் கொள்ளை அடிப்பதே ???.


Ramesh Sargam
ஆக 16, 2024 12:12

மாணவர்களுக்கு மதியம் இலவச சாப்பாடு, மாதம் நூறு அமெரிக்க டாலர் மானியம், இலவச நோட்டுப்புத்தகம், பெண்களுக்கு ரயில், பேருந்துகளில் இலவச பயணம் என்று இந்தியாவில் பல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் உண்மையில் செயல்படுத்த முடியாவிட்டாலும், சும்மா தேர்தல் வாக்குறுதி போல கொடுத்து வாக்குகளை கமலா அவர்கள் அள்ளலாம். மேலும் ஐடியாவுக்கு அவர் என்னை அணுகலாம்.


Kumar Kumzi
ஆக 16, 2024 11:19

கமலா ஹரிஸ் இந்திய எதிர்ப்பு கொள்கையை கொண்டவர் இவர் ஆட்சிக்கு வந்தால் பங்களாதேஷ் பிரச்சினையை போல் இந்தியாவிலும் தூண்டிவிட கூடியவர்


Arul Narayanan
ஆக 16, 2024 10:16

அமெரிக்காவில் ஏற்கனவே வீட்டுக் கடன்கள் வாரி வழங்கியதில் பெரிய வங்கிகள் திவாலாகி கடன் வாங்கியவர்கள் திரும்பக் கட்ட முடியாமல் தெருவில் குடியேற 2007ல் உலகமெங்கும் பெருமந்தம் நெருக்கடியை ஏற்படுத்தியதை மறந்து விட்டார்களா? இந்தியா நிலைமை வேறு. அமெரிக்கா வேறு.


Swaminathan L
ஆக 16, 2024 09:55

புள்ளிவிபரங்கள் முரணாக இருக்கிறது. 30 லட்சம் வீடுகள், 40 லட்சம் பயனாளிகள், 21 லட்சம் வரை மானியம் சரி. 264 கோடி ஒதுக்கீடு என்றால் மிகவும் குறைவாக இருக்கிறது. ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் மானியம் என்று வைத்தாலே, 30 லட்சம் வீடுகளுக்கு 300 கோடி தேவைப்படுமே. முப்பது லட்சம் வீடுகளுக்கு தலா ஒரு லட்சம் மானியம் என்றாலே முப்பதாயிரம் கோடி வேண்டுமே.


வலியவன்
ஆக 16, 2024 09:41

பிஜேபியின் திட்டம் வெறும் அறிவிப்பு நிலையில் உள்ளது. ஆனால் அங்கே அப்படி இல்லை


Kumar Kumzi
ஆக 16, 2024 11:21

ஓசிகோட்டருக்கு அடிமையானவன் எப்போதும் மோடியின் கொள்கை பிடிக்காது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ