உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமலா ஹாரிஸ் Vs டொனால்டு டிரம்ப்; விவாதத்தில் வெற்றி யாருக்கு: அந்நாட்டு ஊடகங்கள் சொல்வது இது தான்!

கமலா ஹாரிஸ் Vs டொனால்டு டிரம்ப்; விவாதத்தில் வெற்றி யாருக்கு: அந்நாட்டு ஊடகங்கள் சொல்வது இது தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நடந்த அதிபர் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார். இருவரும் முதன்முறையாக நேற்று (செப்.,11) பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது இருவரும் தனது கருத்துகளை அள்ளி வீசினர்.இந்நிலையில், இருவரில் யார் வெற்றியாளர் என அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* முதல் அதிபர் விவாதத்தின் வெற்றியாளர் கமலா ஹாரிஸ். டொனால்டு டிரம்பிற்கு எதிரான துணை ஜனாதிபதியின் செயல்பாடு நன்றாக இருந்தது. டிரம்பை மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டு சமநிலையை இழக்கச் செய்தார் என பொலிட்டிகோ செய்தி நிறுவனம் (Politico) தெரிவித்துள்ளது.* கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்பை விவாதத்தில் சரமாரியாக தாக்கி விட்டார் என சி.என்.என்., (CNN) தெரிவித்தது.* டிரம்ப் பெரும்பாலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பைடன் ஆட்சியில் நடந்த சதி மட்டும் பேசிவிட்டு விலகிவிட்டார் என வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.* கமலா ஹாரிஸ் தெளிவாக விவாதத்தில் செயல்பட்டார். அதேநேரத்தில் டிரம்ப் கோபமுடன் விவாதத்தில் இருந்தார் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. * துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கும் முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையே நடந்த விவாதத்தில் வெற்றி பெற்றது தெளிவாக தெரிகிறது என்கிறது பாக்ஸ் நியூஸ் நிறுவனம்.* கிட்டத்தட்ட இரண்டு மணிநேர விவாதம் தொடர்ந்ததால் டிரம்ப் மிகவும் விரக்தியடைந்தார். முன்னாள் அதிபர் கூறிய அனைத்தின் உண்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது ABC நியூஸ் நிறுவனம்.* கமலா ஹாரிஸ்க்கு வெற்றி. அவர் விவாதம் முழுவதும் நிதானமாகவும், அதிபர் ஆக இருக்க வேண்டிய தகுதியுடனும் இருந்தார். விரக்தியடைந்து காணப்பட்ட டிரம்பை ஹாரிஸ் சரமாரியாக தாக்கினார் என MSNBC நிறுவனம் தெரிவித்தது.* டொனால்டு டிரம்ப் கடைசி விவாதத்தில் ஜோ பைடனை வீழ்த்தினார். ஆனால் கமலா ஹாரிஸுக்கு எதிராக விவாதத்தில் பல முறை டிரம்ப் திணறிவிட்டார் என யு.எஸ்.ஏ., டுடே நிறுவனம் தெரிவித்துள்ளது.* துணை அதிபர் கமலா ஹாரிஸ் விவாதத்தில் டொனால்டு டிரம்பை விரக்தி அடைய செய்தார். அவரது பிரசாரத்தில் மக்கள் ஆதரவு இல்லை என்று கூறியும், டிரம்ப்பின் குற்றச் செயல்கள் குறித்து பேசியும் அவரை கமலா திணறடித்து விட்டார். ஹாரிஸ் எழுச்சியுடன் செயல்பட்டார் The Wall Street Journal செய்தி நிறுவனம் தெரிவித்தது. பெரும்பாலான ஊடகங்கள் கமலா ஹாரிஸ் வெற்றியாளராக கருதுகிறது. நேற்றைய விவாதத்தை உலகின் 17 தொலைக்காட்சிகளில் 6.7 கோடி பேர் பார்த்துள்ளனர். விவாதம் முடிந்த நிலையில், பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட், கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். டிரம்ப் ஆதரவு செனட்டர் லின்ட்சே கிரஹாம், விவாதத்தில் டிரம்ப் மோசமாக செயல்பட்டார். கமலா வெற்றி பெற்றார் என்று ஒப்புக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
செப் 12, 2024 21:06

78 வயதில் டிரம்ப் விரக்தியடையாமல், கோபமடையாமல், பொறுமையாக பேச வாய்ப்பில்லை. கமலா ஹாரிஸ் ஒருவேளை அடுத்து அதிபர் ஆனாலும், அதனால் இந்தியாவுக்கு ஒன்றும் பெரியதாக அவர் செய்துவிடப்போவதில்லை.


Velan Iyengaar
செப் 12, 2024 20:07

பிசுபிபி பள்ளி தொடங்கப்பட்ட வருடம் 1959. 1960 வெகு காலம் முன்னர் கிடையாது .... A1 பள்ளி படிப்பு காலம் கூட 1960 க்கு வெகு காலம் முன்னர் கிடையாது ...


வல்லவன்
செப் 12, 2024 15:10

2 மணி நேர பேச்சு திறமையை வைத்து தங்கள் தலைவரை தேர்ந்து எடுப்பதற்கு அவர்கள் ஒன்றும் இந்தியர்கள் இல்லை. டிரம்ப் தன்னை கொல்ல மேற்கொண்ட முயற்ச்சியை வைத்து அனுதாபம் தேடிக்கவில்லை. கமலா தேறுவது கடினம்


R Kay
செப் 12, 2024 14:53

திதி நேஷனல் சொர்ணாக்கா என்றால் ஹாரிஸ் இன்டர்நேஷனல் சொர்ணாக்கா. அவ்வளவே வித்தியாசம். ட்ரம்பின் வெற்றி இந்தியாவிற்கு நல்லது. இருநூறு ரூபாய் உபிக்கள் இன்டர்நேஷனல் அளவில் கருத்து கந்தசாமி ஆக செய்யும் முயற்சி வீண். இருநூறு வாங்கினோமா, இருநூறு மிலி போட்டோமா என்று இருப்பது உலகத்துக்கு நல்லது


kantharvan
செப் 12, 2024 15:57

டிரம்ப் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய அவா ?? ஏனெனில் கடும் பொருளாதார சரிவை சந்திக்கப்போகும் அமெரிக்காவை கமலா தூக்கி நிப்பாட்ட எல்லாம் முடியாது என்றாலும் அடுத்த தலைவர் புதிய கொள்கைகள் மூலம் அமெரிக்காகவே எழுச்சியுற செய்யும் வரை முட்டு கொடுக்க தகுதியானவர்?? நம்முடைய மஸதான் வலதுசாரி ஒல் வில் ஓரி ட்ரம்ப் நிச்சயம் அமேரிக்கா என்றுமே எழ முடியாத நிலைக்கு நிச்சயம் தள்ளிடுவார் என உறுதியாக நம்பலாம். அமெரிக்கா நல்லா இருக்கணும்னு நான் ஏன் நினைக்கணும். அதனால ட்ரம்ப் வெல்லனும் சோலி முடியனும்.


kantharvan
செப் 12, 2024 16:00

திரு கே அவர்கள் தங்கள் வங்கி கணக்கில் பெறப்பட்ட தொகை ரூ 2 கமலா ஆலயம் மூலம். கதவை திற கமலா வரட்டும் என்று வாக்களித்த தங்களுக்கு நன்றி .


தமிழ்வேள்
செப் 12, 2024 11:08

ஒய் டூப்ளிகேட் அய்யங்காரே , ராமசாமி நாயக்கர் பிறப்பதற்கு பல தலைமுறைகள் முன்பிருந்தே அக்ராஹாரத்து பெண்கள் பலவிதங்களிலும் முன்னேறியவர்கள் ஆகவே இருந்தார்கள் . ராமசாமி நாயக்கர் வகையறா வீட்டுப்பெண்களைப்போல கட்டுப்பெட்டிகளாக அல்ல . புரிதல் இருந்தால் , தெரிந்தால் , பதிவிடவும் ....திராவிட முட்டு வேலைக்கு ஆகாது ..


Velan Iyengaar
செப் 12, 2024 12:32

1960 க்கு முன் வெளிநாடு சென்று படித்த ப்ராமண பெண்கள் ஒருவரையாவது குறிப்பிடமுடியுமா ?? கட்டுப்பெட்டிக்கு இலக்கணமே ப்ராமண சமூக பெண்களாக இருந்தார்கள் என்பதை யாரும் அத்துணை சுலபமாக மறந்துவிடமுடியாது ....பிராமண பெண்கள் எண்ணிக்கையில் எத்தனை சதவிகித பெண்கள் கல்வி படிப்பை முடித்தவர்களாக இருந்தார்கள் 1960 க்கு முன்னர் ?? அப்படி முடித்தவர்கள் பெரும்பாலோனோர் வெளிநாட்டு வெள்ளை இன அல்லது கறுப்பின ஆட்களை தான் திருமணம் செய்தார்கள் .....உதாரணத்துக்கு ருக்மிணி தேவி அருண்டேல் ....கமலா மார்க்கண்டேய ....இவருடைய கதைகள் பெண்ணிய புரட்சிகர கதைகள் ....


Neutrallite
செப் 12, 2024 19:25

PSBB பள்ளிகளின் தொடக்க வரலாறை படியும். அது ஒரு மகளிர் சங்கத்தால் தொடங்கப்பட்டது. அனைவரும் படித்தவர் மட்டும் அல்ல. மிக புதுமையாக, பள்ளிக்கல்வியை நடைமுறை படுத்தியவர்கள். ஜெயலலிதா எப்போது படித்து மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தார்? எப்போது படிப்பை தொடங்கினார்? muthulakshmi ரெட்டி எத்தனையோ காலம் முன்பே மருத்துவம் படித்தவர். இன்னும் சொல்ல போனால் ட்ராவிடர்களால் பாரதியாரை இருட்டடிக்க கொண்டுவரப்பட்ட பாரதிதாசன் மனைவி தான் அடிமையாக நடத்தப்பட்டவர். அவர் வாழ்க்கை வரலாற்றை படியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு தீருதற் தீருதர் முயல் கொம்பே என்றெல்லாம் பேசிவிட்டு பாரதிதாசன் என்பார் தன மனைவியை அடிமையாய் வைத்திருந்தார். பாரதியார் எப்படி நடந்து கொண்டார் என்று பாரும். திராவிடம் தனக்கு தக்கபடி சவடால் மட்டும் பேசும். சமுதாயம் ப்ராஹ்மணர் உட்பட தன்னை தானே காலத்திற்கேற்றாற் போல மாற்றி கொள்ளும். திராவிடம் அதில் ஸ்டிக்கர் ஒட்டி பீத்தி கொள்ளும்.


MADHAVAN
செப் 12, 2024 11:04

அங்க யாரு ஜெயிச்சாலும் இங்க மோடி மற்றும் பிஜேபி ஆட்சி ஒழுங்கா இல்லாதபோது அடுத்தவனை சொல்லி என்ன பயன்


Velan Iyengaar
செப் 12, 2024 10:27

கமலா ஹாரிஸ் ப்ளூ டூத் காதணி அணிந்து சீட்டிங் செய்துள்ளது வெளிவந்துள்ளது .... எங்க போனாலும் நம்ம ஆளு நம்ம புத்திய காட்டிடுவாங்களோ ???


Sureshkumar
செப் 12, 2024 10:16

எல்லா ஊடகங்களிலும் ஒன்றுபோல் சொல்வது சந்தேகமாகஉள்ளது


Velan Iyengaar
செப் 12, 2024 10:40

இங்க அப்படி தான் எழுதுவாங்க


ராமகிருஷ்ணன்
செப் 12, 2024 12:38

திமுக அல்லக்கை ஊடகங்கள் இங்க செய்வதை விட ஒன்றும் மோசமில்லை.


ராமகிருஷ்ணன்
செப் 12, 2024 09:49

கமலா ஹாரிஸ்க்கு கிடைத்த வெற்றி பிராமண எதிர்ப்பு பேராளி ஈ வே ரா வுக்கு வெற்றி, வெற்றி இதை இந்து விரோத திமுகவின் சாதனையாகவும் கொள்ள வேண்டும்.


Velan Iyengaar
செப் 12, 2024 10:35

ரொம்போ சாமர்த்திய பதிவு என்று நினைத்து சேம் சைடு கோல் அடித்துக்கொண்டுள்ளார் பெண்கள் அக்ராஹாரத்தில் இருந்து வெளியே வர பெரியாரும் ஒரு நேரடி மற்றும் மறைமுக காரணம் என்பதை ஒப்புக்கொள்ள பெரியமனசு வேண்டும் .....


R Kay
செப் 12, 2024 14:47

உபிக்கு இருநூறு கிடைத்ததா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை