உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமினை பாக்., சுப்ரீம் கோர்ட்டில் உதாரணம் காட்டிய இம்ரான் கான்

கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமினை பாக்., சுப்ரீம் கோர்ட்டில் உதாரணம் காட்டிய இம்ரான் கான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ இந்தியாவில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் தனக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்தப்படுகிறது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வழக்கு ஒன்று தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இம்ரான் கான் ஆஜரானார். அப்போது நீதிபதி ஒருவர், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சி தலைவராக உள்ள இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.இதனை தொடர்ந்து நீதிபதிகள் முன்பு இம்ரான் கான் கூறியதாவது: இந்தியாவில் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ள சிறையில் இருந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறேன். தேர்தலில் நான் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில், தேர்தல் நடந்த பிப்.,8 ம் தேதிக்கு 5 நாள் முன்பு எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளுக்கும், தற்போது எனக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Jones
ஜூன் 08, 2024 08:15

அங்கு பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது இங்கே அடிமையாக இருந்தால் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் எதிர்த்து கேட்டால் ரெய்டு எடுப்பார்கள்


Suresh K
ஜூன் 07, 2024 23:41

மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சுகபோக வழக்கை வாழ்ந்து குற்றவாளி என்று தெரிந்து தண்டனை பெற்று சிறை சென்று என்ன அருகதை இருக்கிறது இது போன்று பேச.... யாராக இருந்தாலும் கைது செய்து சிறை சென்றபின் பேச என்ன அருகதை இருக்கிறது இது போன்ற குற்றவாளிகளுக்கு.... சிறை சென்றபின் தயவு செய்து மக்கள் பணி செய்ய இவர்களை மீண்டும் அனுமதிக்க கூடாது.... மக்களும் இது போன்ற குற்றவாளிகளுக்கு ஓட்டு போட கூடாது....


Azar Mufeen
ஜூன் 07, 2024 21:08

உங்கள் கட்சியில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் இருந்தாலும் எங்க பூசனை உதாரணம் காட்டி சொல்லுவார் போலும்


பரமசிவம்
ஜூன் 07, 2024 20:24

இங்கே மூர்க்கம் அவ்வளவா கிடையாது. நீதி, நியாயம் உண்டு.


spr
ஜூன் 07, 2024 19:38

நல்ல வேளை இந்தியாவில் சிறையிலேயே ஒருவர் பொறுப்பில்லாத அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலை தன வழியில் நடத்த முடிகிறது இன்னொருவர் நீதிமன்றத்தால் "ஸ்டே" அதன் பொருள் குற்றம் செய்தாலும், தண்டனையில் என்பதாம் விடுதலை ஆகி அமைச்சராக இருக்கிறார் இதனை விட சிறப்பு சிறையில் இருக்கும் ஒருவர் தேர்தலில் நின்று எப்படி அனுமதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை வெற்றி பெற்று இப்பொழுது பதவியேற்க ஜாமீன் விடுதலை கூட கேட்கலாம் கேட்டு சட்டத்திற்கே சவால் விடுகிறார் என்றெல்லாம் சொல்லவில்லை


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 19:12

நீங்களும் அதே சாராய வழக்கா என்ன? அது இஸ்லாத்தில் ஹராம். பெரும் பாவம் .


Anand
ஜூன் 07, 2024 18:23

கெஜ்ரிவால் மீண்டும் உள்ளே சென்று விட்டார் என யாராவது எடுத்து கூறுங்கள்.


Jai
ஜூன் 07, 2024 18:15

தவறான உதாரணம் காட்டி விட்டீர்கள் இம்ரான் கான். கெஜ்ரிவால் கண்டிப்பாக சிறைக்குப் போகப் போகிறார், அவர் செய்த ஊழலுக்காக. நாளை உங்கள் நீதிமன்றம் கெஜ்ரிவால் மாதிரியே உங்களையும் திரையில் நடக்கிறோம் என்று சொல்லிவிட போகிறார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 18:07

எதற்குத்தான் இந்தியாவை உதாரணம் காட்டவேண்டும் என்ற ஒரு வெவஸ்தை கிடையாதா?


Lion Drsekar
ஜூன் 07, 2024 18:04

இன்னமும் சிறிதுகாலம் பொறுத்துக்கொள்ளுங்கள் எம் மக்கள் உங்களை எங்கள் நாட்டிலேயே தேர்தலில் நிற்கவைத்து வெற்றிபெறச்செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்கள் . இங்கு வெற்றிபெற்றவர்கள் உங்கள் நாட்டுக்கொடியுடன் ஜிந்தாபாத் என்று கூறுகிறார்கள் , சுதந்திரத்துக்கு முன்பு இருந்த அதே நிலை இப்போது மீண்டும் வந்துவிட்டது . இத்தனை ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் வழியாக தங்கள் இருநாட்டு உள்ளவர்கள் இங்கு வருவதும் , வியாபாரம் செய்வதும் , சம்மந்தியாவதும் , இருந்தது , இனி அதே நிலையை மனதலிவில் இரு தரப்பிலும் ஒன்றிணைந்து விட்டதால் , வாங்க பழகுங்க , ஒன்றிணைவோம், உலக சரித்திரத்தில் இடம் பெறுவோம் . உலக சரித்திரத்தில் பிரிந்ததைப் பார்த்திருக்கிறோம் , பிரிந்தவர்கள் ஒன்றிணைத்ததையும் பார்ப்போம் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி