உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸ்திரேலியாவிலும் இந்தியருக்கு ‛‛மவுசு: முதன்முறையாக அமைச்சராகி சாதனை

ஆஸ்திரேலியாவிலும் இந்தியருக்கு ‛‛மவுசு: முதன்முறையாக அமைச்சராகி சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: ஆஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். கோட்டயம் மாவட்டம் பலா மூன்நிலவு என்ற பகுதியில் பிறந்தவர் ஜின்சன் ஆண்டோ சார்ல்ஸ் 35. இவர் 2011 ல் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்று அங்கு டாப்மென்டல் ஹெ ல்த் மையத்தின் இயக்குநராகவும், சார்லஸ் டார்வின் பல்கலை., பேராசிரியராக பணியாற்றினார். ஆஸி., வடக்கு மாகாணத்தின் சாண்டர்சன் என்ற பகுதியில் நடந்த தேர்தலில் ஜின்சன் எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஆஸ்திரேலியே அமைச்சரவையில் விளையாட்டு, இளைஞர்கள் நலம் , கலாசார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கேரள காங்கிரஸ் மாணவர் யூனியன் மற்றும் மலையாள சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் . மேலும் இவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா காங்கிரஸ் எம்.பி. அன்டோ அந்தோணியின் மருமகன் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Suresh Sampath
செப் 12, 2024 20:15

இவர் ஒரு இந்தியர் அல்ல. இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேயாவில் குடியேறி அந்நாட்டு பிரஜையாக மாறியவர். ஆகையால் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்னாள் அதை சரி பார்த்தபின் வெளியிடவும்.


என்றும் இந்தியன்
செப் 12, 2024 16:47

Director of Top End Mental Health for the Northern Territory Government and a Lecturer at Charles Darwin University


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 12, 2024 15:48

கேரளாகாரர் என்றால் கண்டிப்பாக அவருடைய மாநில மக்களுக்கு கண்டிப்பாக எதேனும் செய்வார். ஏனென்றால் எந்த ஊர் சென்றாலும் எதிரியாக இருந்தால் கூட எந்த ஒரு கேரளாகாரரும் இன்னொரு கேரளாகாரரை விட்டு தர மாட்டார்கள். அது அவர்களுடைய ஜீனிலேயே உள்ளது. ஆனால் தமிழ் நாட்டு மக்கள் அப்படி இல்லை. அதற்கு நேர் எதிர்.


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 12:41

வெள்ளாட்டு துறை அரைகுறைகளுக்கு எளிதில் கிடைக்கும் துறையோ ????


Ramesh Sargam
செப் 12, 2024 11:45

பேசாம ராகுல் காந்தியும் அவருடைய பாட்டி வசிக்கும் நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு அங்கே அமைச்சர் ஆகலாம். இந்தியாவில் அவருக்கு வாய்ப்பே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை