உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் மேலும் ஒரு இந்தியர் கைது

கனடாவில் மேலும் ஒரு இந்தியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 4வதாக ஒரு இந்தியரை கைது செய்துள்ளதாக கனடா போலீசார் கூறியுள்ளனர்.வட அமெரிக்க நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில் 2023 ஜூன் 18 ல் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தால் கனடா - இந்தியா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இக்கொலை வழக்கில், ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும் கரன் பிரார்(22), கமல்ப்ரீத் சிங்(22), கரன்ப்ரீத் சிங்(28) ஆகிய மூன்று இந்தியர்களை கனடா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் அந்த நாட்டின் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.இந்நிலையில், இந்த வழக்கில் 4வதாக மற்றொரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். சர்ரே பகுதியில் பிரம்ப்டன் என்ற இடத்தில் வசித்து வந்த அமர்தீப் சிங்(22) என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

subramanian
மே 14, 2024 21:20

கனடா நாட்டு அரசு காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் உண்மையான நல்ல குடிமகனாக நடந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் பாரதத்தின் மீதான வீண் வெறுப்பை கைவிட வேண்டும்


சிங்
மே 12, 2024 14:08

படிக்க போகி வீணாகி உள்ளார்....


Kasimani Baskaran
மே 12, 2024 14:00

தீவிரவாத இயக்கங்களின் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் அவர்களின் ஊது குழல் போல செயல்பட்டு ஆட்சி பற்றி கவலைப்படாமல் இருக்கிறார் அடுத்த முறை அவரது ஆதரவாளர்களே கூட அவரை ஆதரிக்க மாட்டார்கள்


ஆரூர் ரங்
மே 12, 2024 12:09

பாரதம் வல்லரசாக முன்னேறுவதை சகிக்காத சக்திகளின் சதி. எதிர்வினை பலமாக இருக்கட்டும்.


Senthoora
மே 12, 2024 16:06

உங்க நாசகார வேலையை, உங்க நாட்டில் வதைத்திருக்கணும், சும்மா உங்க நாட்டு போலீஸ்போல அவங்க ஆதாரம் இல்லாமல் கைது, விசாரணை செய்யமாட்டாங்க


Veeraa
மே 12, 2024 12:03

Looks like gangwar among kaalistan groups. Canada government is under the control of Kaalistan supporters.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி