வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நோயை கட்டுப்படுத்த கலிபோர்னியா மாநில சுகாதார அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கலிபோர்னியா: 'டிரையடோமைன்' எனப்படும் முத்தப்பூச்சி பரப்பும், 'சாகஸ்' நோய்க்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த முத்தப் பூச்சிகள் மனிதர்களின் முகத்தில், குறிப்பாக உதடுகள் அல்லது கண்கள் அருகே கடிப்பதால், இதற்கு இந்த பெயர் வைத்து உள்ளனர். பூச்சிகள் கடிக்கும்போது, 'ட்ரைபனோசோமா க்ரூஸி' எனும் ஒருவகை ஒட்டுண்ணியை பரப்புகின்றன. இந்த ஒட்டுண்ணி சாகஸ் நோயை ஏற்படுத்துகிறது. இது, இதய மற்றும் செரிமான அமைப்புகளை பாதிக்கும் ஒரு தீவிர நோயாகும். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தப் பூச்சிகள் பரவலாகக் காணப்படுவதாகவும், இது பரப்பும் சாகஸ் நோய் ஆரம்பத்தில் அறிகுறிகளைக் காட்டாது; அதே சமயம் நீண்டகாலத்தில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நோயை கட்டுப்படுத்த கலிபோர்னியா மாநில சுகாதார அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.