உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிசுக்கு பராக் ஒபாமா ஆதரவு

சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிசுக்கு பராக் ஒபாமா ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவதற்கு, துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஜோ பைடன், 81, களமிறங்குவார் என கூறப்பட்டது. எனினும், வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்படும் அவர், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, சமீபத்தில் அறிவித்தார். மேலும், அதிபர் தேர்தலில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஜோ பைடன் கூறினார்.இதைத் தொடர்ந்து, ஜனநாயக கட்சி சார்பில், டிரம்பை எதிர்த்து களமிறங்க, கமலா ஹாரிசுக்கு அக்கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர். எனினும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசு பொருளானது இந்நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்சேல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, சமூக வலைதளத்தில் பராக் ஒபாமா வெளியிட்ட பதிவு:இந்த வார துவக்கத்தில் மிட்சேலும், நானும் எங்கள் தோழி கமலா ஹாரிசை அழைத்து ஆதரவை தெரிவித்தோம். அமெரிக்காவின் சிறந்த அதிபராக, கமலா ஹாரிஸ் வருவார் என, நம்புகிறோம். அவருக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு. அமெரிக்காவுக்கு நெருக்கடியாக இருக்கும் இந்த தருணத்தில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ManiK
ஜூலை 26, 2024 19:19

Enough of Obama, Kamala leftist, liberal drama. Their policy is like slow poison full of populist minority appeasement


Duruvesan
ஜூலை 26, 2024 18:52

விடியல் தான் வர்ராரு, அங்க கமலா செயிக்க போறாரு, விடியல் கண்டி சூறாவளி பிரச்சாரம் செய்தால் கமலா வெற்றி உறுதி


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2024 17:49

அமெரிக்காவில் அகதிகளாக வந்தால் அவர்களுக்கு நல்வாழ்வு தருவோம். பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவோம் இது தான் அமெரிக்க வாழ் தமிழ்நாட்டு இந்திய பெண்ணின் தீர்வு


Easwar Kamal
ஜூலை 26, 2024 16:56

ஒபாமா உள்ளெ வந்தாச்சு அப்புறம் என்ன தகடு தத்தம் செஞ்சாதான் டிரம்ப் ஒலிக்க முடியும்.


Balasubramanian
ஜூலை 26, 2024 16:56

செப்டம்பர் 10 தேதி டிரம்ப் கமலாவுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக கேள்வி! பார்க்கலாம்


Barakat Ali
ஜூலை 26, 2024 16:43

வில்லி பிரவுன் ம் கைநீட்டி ஆதரவு கொடுத்திருப்பாரே ????


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 16:27

ஜோ அளவுக்கு மேடம்க்கு தேர்தல் தில்லுமுல்லு செய்ய வருமா? அதற்கு ரஷ்ய ஆதரவு கிடைக்குமா?


Ramesh Sargam
ஜூலை 26, 2024 15:36

ஒபாமாவே மீண்டும் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும். Vote for Obama.


SANKAR
ஜூலை 26, 2024 16:19

As per US constitution only TWO terms for one person.He already served two terms.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி