உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்

நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: வங்கி மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498.20 கோடி கடனை பெற்று, அதனை திருப்ப செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். பிறகு, சி.பி.ஐ., அளித்த புகாரின் பேரில், கடந்த 2019ம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேண்ட்ஸ்வெர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாகக் கூறி, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது அவரது 10வது ஜாமின் மனுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
மே 16, 2025 10:04

வக்கீல் அண்ணன் பா சிதம்பரத்தை அழைத்து சென்று ஜாமீன் வாங்கவும்


பாமரன்
மே 16, 2025 09:37

வெற்றி வெற்றி...‌பகோடா கம்பெனியின் நல்லாட்சிக்கு வெற்றி


Ramesh Sargam
மே 16, 2025 08:29

லண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் தட்டுப்பாடு போல தெரியுது. இந்தியாவுல கூப்பிட்டு கொடுப்பாங்க.