உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்தாரா மனைவி? வைரல் வீடியோ

பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்தாரா மனைவி? வைரல் வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹனோய்: பிரான்ஸ் அதிபர் மேக்ரானை அவரது மனைவி கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பேரால் பார்த்து பகிரப்பட்டு வருகிறது.பிரான்ஸ் நாட்டு அதிபராக உள்ளவர் இமானுவேல் மேக்ரான். இவர் தற்போது இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவி பிரிஜிட்டி உடன் மேக்ரான் வந்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்குவதற்கு சில வினாடிகள் முன்னதாக, அதிபரை கன்னத்தில் மனைவி பிரிஜிட்டி அறைவது போன்ற வீடியோ இணையத்தில் பரவலாகி வருகிறது. விமானத்தின் கதவு திறந்த அடுத்த நொடியே, மேக்ரான் முகத்தை சிவப்பு வண்ண ஆடை அணிந்த ஒரு கை தள்ளுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளன. அடுத்த சில நிமிடங்களில் சிவப்பு வண்ண ஆடையுடன் மேக்ரான் மனைவி பிரிஜிட்டி வெளியே வரும் காட்சிகளும் உள்ளன.இந்த வீடியோ உண்மை தானா என்று பலரும் கேள்விகளை முன் வைக்க, உண்மையே, ஒரு நெருக்கமான நிகழ்வு என்று பிரான்ஸ் அதிபர் அலுவலகம் கூறி உள்ளது. இருவருக்கும் இடையே இது ஒரு விளையாட்டாக நடைபெற்ற சண்டை என்றும் விளக்கம் அளித்துள்ளது.இந்த பளார் அறை வீடியோவானது, ரஷ்ய நாட்டு ஆதரவு பெற்ற சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkatesan.v
மே 27, 2025 01:02

அந்தம்மா கிட்ட இவன் 1 ஆம் வகுப்பு படிச்ச பையன். அந்த உரிமையில் கண்டிச்சிருக்கலாம்.


venugopal s
மே 26, 2025 22:52

சண்டையில் கிழியாத சட்டையும் கிடையாது, மனைவியிடம் அடி வாங்காத கணவனும் கிடையாது!


V K
மே 26, 2025 21:33

நாட்டுக்கு ரொம்ப mukkeyam


Kulandai kannan
மே 26, 2025 21:26

மேக்ரான் இன்னொரு ட்ரூடோ. அவனா நீ ஆள்.


Ramesh Sargam
மே 26, 2025 21:15

ஒரு நாட்டின் அதிபருக்கே இந்த கதி என்றால், வீட்டில் இருக்கும் வீட்டின் அதிபதி, அதான் கணவன்.... அவன் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.


மீனவ நண்பன்
மே 26, 2025 20:20

அம்மணிக்கு அம்மா வயசு ..செல்லமா ரெண்டு தட்டு தட்டி கண்டிப்பதில் தப்பே கிடையாது


ஆரூர் ரங்
மே 26, 2025 20:04

வீட்டுக்கு வீடு வாசற்படி.


Asagh busagh
மே 26, 2025 19:30

எதையாவது சொல்லி மழுப்பவில்லைனா, அடுத்த அடி இடி மாதிரி விழும். இடுப்பில எட்டி உதைப்பாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை