உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது அர்த்தமற்ற செயல்; இந்நாள் அதிபர் பைடனுக்கு, வருங்கால அதிபர் டிரம்ப் கண்டிப்பு

இது அர்த்தமற்ற செயல்; இந்நாள் அதிபர் பைடனுக்கு, வருங்கால அதிபர் டிரம்ப் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் 37 கைதிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த, அதிபர் பைடனுக்கு, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.அமெரிக்கா அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் களம் இறங்கிய, டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், தற்போதை அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பேருக்கு, அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், 'குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்' என ஜோ பைடன் கூறியுள்ளார். இந்நிலையில், கைதிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த, அதிபர் பைடனுக்கு, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜோ பைடன் நமது நாட்டில் மிக மோசமான கொலையாளிகள் 37 பேருக்கு மரண தண்டனையை குறைத்தார். ஒவ்வொருவரின் செயல்களைக் கேட்டால், அவர் இதைச் ஏன் செய்தார் என்று நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். எந்த அர்த்தமும் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் கூட, இதனை நம்ப மாட்டார்கள்'. இவ்வாறு பைடனை, டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

என்றும் இந்தியன்
டிச 25, 2024 18:10

பைடன் உடனே டாஸ்மாக்கினாட்டுக்கு வாருங்கள். நீங்கள் போட்டியிட்டால் ஸ்டாலினுக்கு பதிலாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் இது உறுதி.


sankaranarayanan
டிச 25, 2024 13:28

அட பேஷ் பேஷ் டிரம்பு - பைடன் கூட திராவிட மாடல் அரசின் செயக்களை பின்பற்றுகின்றனரே அரசியல் தலைவர்கள் பிறந்த தினத்தன்று எல்லா சிறைக்கைதிகளும் திராவிட நாட்டில் விடுவிக்கப் படுவார்கள் பிறகு புதிதாக கைதிகள் சில காலம் சிறைச்சாலைக்கு வருவார்கள் பிறகு அவர்களும் தலைவர்கள் தினத்தன்று விடுதலை பெறுவார்கள் இப்படி ஒரு மாநிலம் உலகிலே வெறுங்குமே கிடையாது


Tirunelveliகாரன்
டிச 25, 2024 14:23

குஜராத்தில் பில்கிஸ் பானு மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மாலையிட்டு செய்த மரியாதையை மறைக்க, எதையாவது உளர வேண்டியது.


என்றும் இந்தியன்
டிச 25, 2024 18:22

குழந்தாய் குஜராத் கோத்ரா வழக்கு எப்படி??? பாகிஸ்தான் சொல்லி இங்குள்ள முஸ்லிம் தலைவன் சில உஸ்லிம் வேலைக்காரர்களுடன் ஒரு ரயில் பெட்டியை பெற்றோல் ஊற்றி கொளுத்தி அந்த பெட்டியில் பயணம் செய்தவர்களை கொடூர கொலை செய்தார்கள். இந்துக்கள் அதை தட்டிக்கேட்க அந்த முஸ்லீம் தலைவன் வீட்டிற்கு சென்ற போதுஅவன் துப்பாக்கியால் சுட்டு அதில் 2 இந்துக்கள் இறந்து போனார்கள். இதில் அநேக இந்துக்கள் மற்றும்முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். முஸ்லீம் பாகிஸ்தான் சொல் கேட்டு இந்தியாவை ஒழிக்கப்பார்த்தால் அதை இந்தியர்கள் வேடிக்கை பார்த்துகொண்டுசும்மா இருக்கணும், அப்படித்தானே முஸ்லீமே, நீ வெறும் முஸ்லிமாக மட்டுமே இருக்காது மனிதனாக மாறு முதலில், அப்போது தான் நீ செய்யும் தவறுகள் உனக்குப்புரியும்


Barakat Ali
டிச 25, 2024 12:20

டிரம்ப் தன்னை பெரீய்ய .... அண்ணாமலை என்று நினைத்துக்கொண்டாரா ??


Varadarajan Nagarajan
டிச 25, 2024 10:23

தலைவர்களின் பிறந்தநாள் என காரணம் காட்டி வேண்டப்பட்ட தண்டனை குற்றவாளிகளையும் சேர்த்து விடுதலை செய்யும் நமது கலாச்சாரம் அமெரிக்க வரை சென்றடைந்துள்ளது. நமது ஆட்சியை உலக நாடுகளும் பின்பற்றுகின்றன என பெருமைப்படலாம்


SS
டிச 25, 2024 10:01

டிரம்ப் பாலியல் குற்றசாட்டில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். தண்டனை அறிவிக்கப்படவில்லை.


Rajan A
டிச 25, 2024 09:59

This is because of pardon granted to his son. Even american politicos ate like our dravid model


Tirunelveliகாரன்
டிச 25, 2024 14:28

Are you ashamed to say that you are the Gujarat government? Are you making such a fuss to hide the fact that you paid tribute to the criminals by garlanding them?


Shekar
டிச 25, 2024 09:38

அட போயா ....ஒன்னும் உலகம் தெரியாம.....நாங்க அண்ணா பொறந்தநாள் தம்பி பொறந்தநாள் அப்படின்னு பலர் சாவுக்கு காரணமானவனுகளை சுதந்திர பறவைகளாக்கினோம். ஒரு பிரதமரை கொன்னவனை கட்டி புடிச்சி டீ சாப்பிட்டோம். இதெல்லாம் எங்களுக்கு சப்பை மேட்டர்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 25, 2024 09:24

மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பது பின்னர் நல்லொழுக்கம் என்ற பெயரில் முன் கூட்டியே விடுதலை செய்வது அதன் பின்னர் வெளியே வரும் குற்றவாளியை ஆரத்தழுவி வரவேற்பது இதெல்லாம் திராவிட மாடல் சொந்தமான காபிரைட் கொள்கைகள். காபிரைட் சட்டத்தை அமெரிக்கா மீறி விட்டது. பைடன் குற்றவாளி.


Kasimani Baskaran
டிச 25, 2024 08:54

மரண தண்டனை என்பது முடிந்துவிடும் - ஆயுள் தண்டனை என்பது தொடர் சித்திரவதை. அந்த வகையில் பார்த்தல் பைடன் செய்தது சரியே.


visu
டிச 25, 2024 09:41

ஒருவரை சித்திரவதை செய்வது நீதியின் நோக்கம் அல்ல அவர் இந்த சமூகத்தில் மீண்டும் இதுபோல கொடூரமாக நடந்து கொள்வாரா அல்லது இவருக்கு அளிக்கும் தண்டனையை பார்த்து இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் எனதுதான் நோக்கம் இந்த கூலிப்படைகளுக்கு குறைந்த தண்டனை தருகிறார்கள் மரண தண்டனை கொடுத்தால் யாருமே யாருக்காகவும் காசுக்காக கொலை செய்ய துணியமாட்டார்கள்


Sridhar
டிச 25, 2024 10:45

அப்படி அல்ல. மரணதண்டனை நாளைக்கு என்று இருந்தால், அவன் ஒவ்வொரு நாளும் சாவான். ஆயுள் தண்டனை என்றால் அவனுக்கு திராவிட மாடல் கொடுக்கும் தைரியம் வந்துவிடும். அந்த நம்பிக்கையிலேயே ஜெயிலில் ஓசி சோறு சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டுவான்


M Ramachandran
டிச 25, 2024 08:42

பைடனின் கோரமுகம் அவர் எய்த கடைசிகால நிகழ்வுகளிலிருந்து தெரிய வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை