உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா; இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

வெள்ளத்தில் மிதக்கும் மலேசியா; இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலாலம்பூர்: மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பார்னேவில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக, குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள ஏற்பட்டுள்ளன. நேற்று வரையில் இந்த கனமழையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு மையம் அமைந்திருக்கும் சாபா மற்றும் சரவாக் பகுதிகளில் மட்டும் 700 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக அரசு கொடுத்த தரவுகளில் தெரிய வந்துள்ளது. அதேபோல, அண்மையில் பின்டுலுவில் 48 மணிநேரத்தில் 800 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், இன்று வரையில் இந்த கனமழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது அந்நாட்டு மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N.Purushothaman
ஜன 31, 2025 18:36

கிழக்கு மலேஷியா என்று உள்ள கூடிய இரண்டு மாநிலங்களான சபா ,மற்றும் சரவாக் பகுதிகளில் போதுமே நல்ல மழைப்பொழிவு இருக்கும் ... பருவநிலை மாறுபாட்டால் இந்த முறை அதீத மழை சரவாக்கின் பிந்துலு நகரில் அதிக மழை கொட்டி வருகிறது .....இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...


அப்பாவி
ஜன 31, 2025 16:44

மலேசிய திராவிட மாடல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை