உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம்: பெண் அமைச்சர் கைது

மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம்: பெண் அமைச்சர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பில்லி, சூனியம் செய்த சந்தேகத்தின்பேரில் அந்நாட்டின் பெண் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாலத்தீவு அதிபராக இருப்பவர் முகமது முய்சு. அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் பாத்திமா ஷம்னாஸ் என்பவர் அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக புகார் எழுந்தது. பாத்திமா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சூனியம் தொடர்பான பல பொருட்களை கைப்பற்றினர். இதனையடுத்து பாத்திமா ஷம்னாஸை போலீசார் கைது செய்தனர்.பெரும்பகுதி முஸ்லிம்கள் வாழும் மாலத்தீவில், பண்டிதா அல்லது சிஹூரு என அழைக்கப்படும் பில்லி, சூனியம் வைப்பது, இஸ்லாமிய சட்டத்தில் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதிபருக்கு எதிராகவே பெண் அமைச்சர் பில்லி, சூனியம் வைத்ததற்காக கைது செய்யப்பட்டது, அந்நாட்டில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 20:32

ஈனமான தலீவர், தாலியறுப்பு சாதனையாளர், பகுத்தறிவு பகலவன் ஊருமணி இதை கண்டித்து இரண்டு மணிநேர உண்ணாவிரதம் மேற்கொள்வார் .....


Shankar
ஜூன் 27, 2024 19:05

பில்லி, சூனியத்தை அவர்களுடைய மதம் ஏற்கிறதா?


வாய்மையே வெல்லும்
ஜூன் 27, 2024 19:04

மொய்சுவே டக்குன்னு பார்த்தால் "நல்லகாலம் பொறக்குது" நல்லகாலம் பொறக்குது" ஆசாமி போல தான் இருக்காரு.. என்னாது பில்லிக்கே சூனியமா . நம்பும்படியாக இல்லை அரசே


A P
ஜூன் 27, 2024 18:18

சரியாச் சொன்னீங்க சார்


vee srikanth
ஜூன் 27, 2024 17:41

நம்ம ஊருல கஞ்சா கேஸ் மாதிரி அவங்க ஊர்ல பில்லி சூன்யம் கேஸ்ன்னு நினைக்கிறேன்


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 17:30

இன்னும் இதையெல்லாம் நம்புவதை திராவிட இயக்கங்கள் கண்டிக்குமா?


Shekar
ஜூன் 27, 2024 17:29

இந்து மதம் மட்டும்தான் மூடநம்பிக்கை கொண்டது, அப்படின்னு உருடுற திடல் தற்குறிகள் இதுக்கு என்ன சொல்லுவாங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை