உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளம் நாட்டில் ராணுவ ஆட்சி

நேபாளம் நாட்டில் ராணுவ ஆட்சி

காத்மாண்டு: நேபாளம் நாட்டில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதையடுத்து நாட்டின் அரசு நிர்வாகம் ராணுவம் வசம் சென்றது.நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்கள் நேற்று முன்தினம் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில், பிரதமர் வீடு சூறையாடப்பட்டது. நிலைமை கைமீறிப் போனதால் நேபாள பிரதமர் மற்றும் ஜனாதிபதி ராஜினாமா செய்தனர். இந்த கலவரத்தால் 19 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i4n7xbay&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ராணுவ ஆட்சி

இந்த கடினமான சூழ்நிலையில், உயிர்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் மேலும் இழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும் , ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடரும் கலவரத்தால் நேபாள எல்லையில் வசிப்பவர்கள் நம் நாட்டுக்குள் ஊருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரதமரை பதவி விலக வலியுறுத்திய நேபாளம் நாட்டு ராணுவ தலைமை தளபதி அசோக் ராஜ் சிக்தல் , போராட்டக்காரர்கள் அமைதிகாக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையே பிரதமர் சர்மாஒலி, தனி விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி