உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னபோலிஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பயன்படுத்திய துப்பாக்கியில் யூத, இந்தியா மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு வாசகங்கள் இடம்பெற்று இருந்த தகவல் வெளியானது.அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணம் மினியபோலிஸ் நகரில் கத்தோலிக்க சர்ச் உடன் கூடிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன் அங்கு உள்ள சர்ச்சில் குழந்தைகள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது சர்ச்சின் பக்கவாட்டு பகுதியாக வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக குழந்தைகள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.இந்த கொடூர தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். 14 பேர் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் 23 வயதான ராபின் வெஸ்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இந்த சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பயன்படுத்திய துப்பாக்கியில் யூத, இந்தியா மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் லாரா லூமர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
ஆக 29, 2025 06:20

Trump இன்னும் எத்தனை கொலைகளை செய்யத் தூண்டி அமைதியை கலைத்துக் கொண்டிருப்பாரோ சாமி.


Kasimani Baskaran
ஆக 28, 2025 16:30

தீவிரவாதத்துக்குத்தான் மதம் கிடையாதே...


Anantharaman Srinivasan
ஆக 28, 2025 15:33

இளம் குழந்தைகளை கொன்ற பாவம் இவனை ஏழு தலைமுறைகளுக்கு விடாது.


Ganesh
ஆக 28, 2025 15:30

ஒழுங்காக, முழுவதுமாக அர்த்தம் புரிந்து குரான், பைபிள், கீதை படித்தவர்களால் இந்த சமூகத்திற்கு எந்த தொந்தரவும் கிடையாது... எல்லாம் அரை குறையாக படித்து அரைகுறையாக அர்த்தம் புரிந்து கொள்பவர்களால் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம்


MUTHU
ஆக 28, 2025 17:16

நிறைய பேர் மதங்களை பற்றி தெரியாமல் அதுவும் மத்திய ஆசிய மத வரலாறுகள் பற்றி தெரியாதவர்களால் கொடுக்கப்படும் முட்டு இது. இந்த மதங்களை அரைகுறையாய் படித்தவர்களால் பின்பற்றுபவர்களால் எந்த ஆபத்தும் இருப்பதில்லை. அவர்கள் எதனையும் எளிதாய் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். முற்றிலும் படித்தவர்களே எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.


Azar Mufeen
ஆக 28, 2025 13:48

மாற்று மதத்தை சேர்ந்தவர்களை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று இறைவன் கூறினால் வேறு மதம் உருவாகும்போதே தடுக்க இறைவனுக்கு வக்கில்லையா? வக்கில்லாத இறைவனா உனக்கு சொர்க்கம் தரப்போகிறான்


பிரேம்ஜி
ஆக 28, 2025 20:29

நல்ல கருத்துள்ள கேள்வி! நம் மனதை சுத்தமாக்கி அனைவருடனும் சுமுகமாக வாழ்வே மதங்கள் வழிபாடுகள் எல்லாம்! மற்றவர்களை கொடுமைப்படுத்தி ஆண்டவனுக்கு ஆள் சேர்க்க அவசியம் இல்லை!


Barakat Ali
ஆக 28, 2025 13:05

மதம் தவறல்ல ...... மத தீவிரவாதம் தவறு .....


முக்கிய வீடியோ