உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக அழகி போட்டியில் வெளியேறிய பிரிட்டன் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு

உலக அழகி போட்டியில் வெளியேறிய பிரிட்டன் அழகி பரபரப்பு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: 'உலக அழகிப் போட்டியில் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக அழகிகளை நடத்திய விதம், விபசாரியை போல உணர வைத்தது' என, போட்டியில் இருந்து வெளியேறிய பிரிட்டன் அழகி மில்லா மாகி ஆவேசமாக தெரிவித்தார்.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், உலக அழகி போட்டிக்கான இறுதிச்சுற்று அடுத்த வாரம் நடக்கிறது.

தனிப்பட்ட காரணம்

இந்த நிகழ்ச்சி, 180 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க, பல்வேறு நாடுகளில் இருந்தும் அழகிகள் வந்துள்ளனர். பிரிட்டன் சார்பாக உலக அழகிப் போட்டியில் பங்கேற்க வந்திருந்த மில்லா மாகி, 24, தனிப்பட்ட காரணங்களால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக கடந்த 16ல் அறிவித்தார்.உலக அழகிப் போட்டியின் 74 ஆண்டு வரலாற்றில், இதுபோன்று ஒரு போட்டியாளர், பாதியில் வெளியேறுவது இதுவே முதல் முறை.மில்லா மாகி வெளியேறியதையடுத்து, 'மிஸ் இங்கிலாந்து 2024' போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த, சார்லோட் கிரான்ட், 25, பிரிட்டன் சார்பில், உலக அழகி போட்டியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், லண்டன் திரும்பிய மில்லா மாகி, அங்கு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், போட்டியில் இருந்து வெளியேறியதற்கு ஏராளமான காரணங்களை அடுக்கியுள்ளார். அவர் கூறியதாவது:உலக அழகி போட்டிக்கு நிதி உதவி அளிக்கும் பெரும் பணக்காரர்களை வசீகரிக்கும் வகையில், காலையில் இருந்து இரவு வரை அதிக ஒப்பனை, கவர்ச்சியான ஆடைகளை அணிந்து இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டோம்.

மரியாதைக்குறைவு

ஆறு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மேஜையிலும் இரண்டு பெண்கள், கட்டாயமாக அமர வைக்கப்பட்டனர். அதை, என்னால் நம்ப முடியவில்லை; அவர்களின் பொழுதுபோக்குக்காக நான் வரவில்லை. அவர்களின் செயல்கள் வாயிலாக, என்னை ஒரு விபசாரியைப் போல உணர வைத்தனர். அவர்களை மகிழ்விப்பதற்காக, வித்தைக்காட்டும் குரங்குகளைப் போல அமர்ந்திருந்தோம். என்னால், அதைத் தாங்க முடியவில்லை. இதெல்லாம் சிறிய நிகழ்வுகள் தான். உண்மையில் எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தனர் என்பது மரியாதைக் குறைவாக அவர்கள் நடந்துகொண்ட விதமே காட்டிக் கொடுத்தது. உலக அழகி என்ற பட்டத்துக்கென தனி மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் பழைய காலத்திலேயே சிக்கிக் கிடக்கிறது. உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உங்கள் குரலை பயன்படுத்தும்போது, உலகில் உள்ள அனைத்து கிரீடங்களும் ஒன்றுமே கிடையாது. எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே, நான் வெளியேறினேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sivakumar
மே 25, 2025 23:16

சிங்கப்பெண் இவள்.வாழ்த்துக்கள்


K V Ramadoss
மே 25, 2025 11:48

ஓரளவுக்கு பூடகமாக தெரிந்த விஷயம் தான்.. பெண்களை காட்சிப் பொருளாக வைத்து நடத்தும் எந்த நிகழ்வும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல. அரசல் புரசலாக, பெரும் தனவந்தர்களின் இச்சைகளை திருப்தி படுத்தும் நிகழ்வுகள் இருக்கவே செய்யும். அது உலகில் எங்கு நடந்தாலும் சரி. பிரிட்டன் அழகி விஷயத்தை வெளிச்சம் போட்டு தைரியமாக பேசியதற்கு அவரை பாராட்டத்தான் வேண்டும்.


ராமகிருஷ்ணன்
மே 25, 2025 10:33

நல்ல வேளை திமுகவின் கறுப்பு பணம் களவாணிகள் கண்ணில் படாமல் தப்பித்து விட்டீர்கள். E D யால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் இந்த நேரம் புது தமிழ் படத்தில் நடிக்க சென்னை வந்திருப்பீர்கள். பார்ட்டியில் கலந்து கொண்டு 40 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியிருப்பீர்கள்


rama adhavan
மே 25, 2025 09:39

அழகி போட்டியால் என்ன பயன் மக்களுக்கு, போட்டியாளர்களின் செயற்கை கவர்ச்சியைத் தவிர? இதை தடுத்தால் உலகத்திற்கு மிகவும் நல்லது.


rengarajan
மே 25, 2025 09:25

இப்பவாது புரிஞ்சுதே


senthilanandsankaran
மே 25, 2025 08:45

ஆமாம். நீ ஒரு..... தான் ... பணத்துக்கு. தானே ஆசைப்பட்டு.


மீனவ நண்பன்
மே 25, 2025 08:38

அம்மணி எதிர்பார்த்த அளவு டப்பு தரவில்லையோ ?


bgm
மே 25, 2025 07:56

கொஞ்சம் நீ உங்க நாட்டின் வரலாற்றை படி. 500 ஆண்டுகளாக எங்களை சுரண்டி அடிமை படுத்த முயற்சித்து பின் புறமுதுகிட்டு ஓடியது...


sasikumaren
மே 25, 2025 07:48

எண்ணூறு கோடி மக்கள் வாழும் இந்த உலகில் நூறு பெண்களை வரவழைத்த பிறகு என்ன வித்தை காட்டவா முடியும் இன்னும் சில காலங்களுக்கு முன் உலக அழகிகள் எல்லோரும் ........


Kasimani Baskaran
மே 25, 2025 07:08

அழகு என்பது ஆபத்தானது. போதை வஸ்துக்களை பலர் விரும்புவது போல அதுவம் ஒரு வகை ஈர்ப்பு. அதில் இருந்து விடுபட அழகு என்பது அழியக்கூடியது என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். சிலருக்கு அதை புரிவதற்குள் ஆயுள் முடிந்துவிடும்.


புதிய வீடியோ