உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி; மிஸ் இந்தியாவாக ஐ.டி., மாணவி தேர்வு

உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி; மிஸ் இந்தியாவாக ஐ.டி., மாணவி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உலகளாவிய இந்திய அழகிகள் பங்கேற்ற அழகிகள் போட்டியில் மிஸ் இந்தியாவாக ஐ.டி., மாணவி த்ருவி பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். நியூஜெர்ஸியில் உலகளாவிய மிஸ் இந்தியா-2024 அழகிகள் போட்டி நடந்தது. உலகம் முழுவதும் வாழும் இந்திய அழகிகள் பலர் பங்கேற்றனர். நியூயார்க்கில் உள்ள இந்தியன் திருவிழா கமிட்டியினர் இந்த போட்டியை நடத்தினர். இந்த அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த போட்டியை நடத்தி வருகின்றனர்.குஜராத்தை சேர்ந்த த்ருவி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்ப படிப்பை மேற்கொண்டுள்ள அவர், அழகிகள் போட்டியில் வெற்றி பெற்றார். இது குறித்து த்ருவி கூறுகையில்; நான் வெற்றி பெற்றது மிக பெரிய ஆச்சரியமாகவும், பெரும் கிரீடம் கிடைத்திருப்தாகவும் உணர்கிறேன் ' பாலிவுட் நடிகையாக வேண்டும் என்பதே இலக்கு, மேலும் ஐ.நா., கலாசார மைய தூதராக வேண்டும் என்றும் சொல்கிறார் இவர்.அமெரிக்காவின் ஸ்ரிநேம் என்ற பகுதியை சேர்ந்த லிசா அப்டோல் ஹக் 2வதாகவும், நெதர்லாந்தை சேர்ந்த மாளவியா ஷர்மா 3வதாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankar
செப் 20, 2024 21:09

இவர் எந்த ஆள் என்று பப்புவிடம் சர்டிபிகேட் வாங்கிவிட்டாரா - ஒருவர் கூட இல்லை என்று அவர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் பாவம்


சமூக நல விரும்பி
செப் 20, 2024 15:12

அன்புள்ள சகோதரிக்கு திரை துறை வேண்டாம். ஐ நா ஓகே.பெற்றோரிடம் கலந்து முடிவு செய்.


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 13:41

அடுத்ததா ஐ டி படிப்பை அம்போன்னு உட்டுட்டு பாலிவுட் வரப்போறீங்க .... எங்களுக்குத் தெரியாதாக்கும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை