உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பினர் தகவல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பினர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. டெல் அவிவ் நகர மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நீடித்து வருகிறது. இதனால், காசாவில் வசித்த பல்லாயிரகணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். இதனால் அப்பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், காசா முனையில் இருந்து டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்பிரிவு தெரிவித்து உள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.இச்சூழ்நிலையில், ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கும் வகையில் டெல் அவிவ் நகர மக்களுக்கு சைரன் ஒலியை எழுப்பி இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதேநேரத்தில், எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை என இஸ்ரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
மே 26, 2024 21:09

முனியாண்டி விலாஸ் முன்னாடி ஆடறதுக்கு ஆட்டுக்கு திரும்ப தைரியம் வந்திருக்கு .....


Senthil K
மே 26, 2024 22:13

எப்படி பாஸ்.. உங்களுக்கு... இந்த மாதிரி காமெடி எல்லாம் வருது??


rsudarsan lic
மே 26, 2024 19:11

சாவுங்கடா


ve
மே 26, 2024 20:45

யாரு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை