உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிஸ்டர் பிலவால் புட்டோ... பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

மிஸ்டர் பிலவால் புட்டோ... பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடுது

இஸ்லாமாபாத்: கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே பிரதமர் மோடி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து பேசுகையில், 'ஒரே நேரத்தில் ரத்தமும், தண்ணீரும் பாய முடியாது' என உறுதியாக தெரிவித்தார்.இதை மறைமுகமாக மேற்கோள் காட்டி, பாக்., வெளியுறவு அமைச்சர் பிலவால் புட்டோ சர்தாரி பேசுகையில், ''சிந்து எங்கள் நதி. அது எப்போதும் போல் ஓடும். நதியின் ஓட்டத்தை நிறுத்த முடியாது. ஒரு வேளை தண்ணீரை நிறுத்தினால், இந்தியர்களின் ரத்தம் ஓடும்,'' என, கொக்கரித்துள்ளார். வெளியுறவு அமைச்சர் என்பவர் இரு நாட்டு உறவுகளை பேணி பாதுகாக்க வேண்டியவர். ஆனால், இவரோ பதவியேற்ற நாளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக வன்முறை பேச்சுக்களையே பேசி வருகிறார். இவரது தாய் பெனசிர், தாத்தா சுல்பிகர் அலி புட்டோ எல்லாம் இந்தியாவுடன் ஓரளவேனும் நல்லுறவை கொண்டிருந்தனர். சிக்கலான தருணத்தில் இந்தியாவின் உதவியை, ஆதரவை பெற்றிருந்தனர்.பிலவால் பேச்சுக்கு இந்தியா தரப்பில் பா.ஜ., மூத்த தலைவர் பரத் கோஷ், ''பாகிஸ்தானில் ஏற்கனவே ரத்த ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அல்-கொய்தாவும் மறுபக்கம் ஆப்கன் தலிபான்களும் பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்து வருகின்றனர். நாங்களும் எங்கள் பங்குக்கு தருவோம். இவர் துவக்கம் முதலே, சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகின்றார்,'' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மீனவ நண்பன்
ஏப் 28, 2025 19:57

நல்ல வேளை மும்பையில் இருந்தால் மின்சார ரெயிலில் கை தட்டி காசு வாங்கும் வேலையே தான் செய்து கொண்டிருப்பார்


kalyan
ஏப் 28, 2025 11:26

முதலில் சுந்தரவல்லி போன்ற தேசத்துரோகிகளை கைது செய்து தகுந்த தண்டனை அளியுங்கள்.


மீனவ நண்பன்
ஏப் 29, 2025 20:06

சுந்தர வில்லி காணொளியை பாருங்கள் ..எப்படியெல்லாம் உருட்டுதுன்னு தெரிய வரும்


Muralidharan S
ஏப் 28, 2025 11:18

வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் இடம் தெரியாமல் இருக்கா விட்டால்... பில்-வால் ஓட்ட நறுக்கப்படும். இந்திய ராணுவத்தால்.


Krishna
ஏப் 28, 2025 10:00

தனது தாத்தாவும் அம்மாவும் கொடூரமாக தனது நாட்டு உளவு துறையால் சதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனாலும் இவனுக்கு புத்தி வரவில்லை.


Bharath Balasubramanian
ஏப் 28, 2025 08:45

தாத்தா இந்தியாவோடு ஆயிரம் ஆண்டுகள் சண்டை போடுவோம் என்றார். தப்பாமல் பிறந்திருக்கிறது பேரன். தண்ணீரும் ரத்தமும் வேறு என்று விரைவில் புரிந்து கொள்வார்.


Dharmavaan
ஏப் 28, 2025 08:44

இந்த கிறுக்கனெல்லாம் மந்திரி என்றால் நாடு எப்படி என்பது தெரிகிறது .பப்புவை விட கேவலம்


மீனவ நண்பன்
ஏப் 28, 2025 07:35

பில்லூ ராணி என்று செல்லமாக பாகிஸ்தானில் இவரை அழைப்பார்கள் ..


இராம தாசன்
ஏப் 28, 2025 07:04

பாக்கிஸ்தானின் ப்ப்பு