உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மும்பை தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

மும்பை தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2008ல், நவ. 26ம் தேதி இரவு மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர். பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 பேரைக் கொன்றனர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டான்.

நடவடிக்கை

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவை சேர்ந்த தவாஹிர் ராணாவை இந்தியா தேடி வந்தது. இந்நிலையில் அவனை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவனை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒப்படையுங்கள்

இந்நிலையில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில், 'இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் படி, ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்' என அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N.Purushothaman
ஆக 17, 2024 16:40

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியதால் அவன் போராளி ....இப்படிக்கு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் வெறியர்கள் ..


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 17, 2024 15:46

பிரதமரை உலகின் முதல் மனித வெடி குண்டு கொண்டு கொன்றவர்களை விடுதலை செய்ய பாகீரத பிரணயாம் செய்து அதில் வெற்றி பெற்று கட்டி அணைத்து வழியனுப்பி வைத்தவர்கள் இங்கு உள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த கட்சி பிரதமர் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டாரோ அதே கட்சியும் கொல்லப்பட்ட பிரதமர் குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது தான்.


Suppan
ஆக 17, 2024 14:45

இங்கு கடைசி தீர்ப்பு எவ்வளவு வருடங்கள் கழித்தோ? வந்த பிறகு சல்மான் குர்ஷீதிலிருந்து ஆரம்பித்து, ராகுல், பூஷன், மணிசங்கர் போன்றோர் நள்ளிரவில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியின் வீட்டுக் கதவைத்தட்டித் திறக்க வைத்து சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த அவனை தூக்கில் போடக்கூடாது எனக் கதறுவார்கள் .


Ramona
ஆக 17, 2024 13:05

நமது நாட்டில் ஒரு கோர்ட்டில் சரணடைய,பிறகு 30 வருடம் தண்டனை இல்லாமல் மக்கள் வரிப்பணத்தை தின்று தீர்ந்துவிடுவார்,பிறகு போதிய ஆதாரம் இல்லை என்று பெயில் கிடைக்கும் அதன் பிறகு பெரிய கட்சி ஒன்று இவருக்கு எம் பி சீட்டு கொடுத்து மகிழ்விப்பார்கள்..இது நிச்சயம்.


Ramesh Sargam
ஆக 17, 2024 12:30

இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டாம். ஏன் அப்படி கூறுகிறேன் என்றால், இங்குள்ள மெத்தப்படித்த வக்கீல்கள், அதாவது நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்த வக்கீல்கள், அந்த ஓட்டைகளை நன்றாக பயன்படுத்தி அவனை தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுவார்கள். ஆகையால் அங்கேயே அவனை ஓடவிட்டு என்கவுண்டர் செய்வது மிகவும் சிறந்தது.


sekar suppiah
ஆக 17, 2024 18:10

நல்ல கருத்து.


Suresh Palanisamy
ஆக 17, 2024 11:58

வந்ததும் முதல் வேலையா தூக்குல போடுங்க


ஆரூர் ரங்
ஆக 17, 2024 11:52

இன்னும் இரண்டு அப்பீல் சான்ஸ் பாக்கியிருக்கே. அதுக்குள்ள ..


subramanian
ஆக 17, 2024 11:16

இவனை இந்தியா கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.


Anand
ஆக 17, 2024 11:01

அவனை இந்தியா கொண்டுவந்ததும் சிறிதும் தாமதிக்காமல் சுட்டுக்கொல்லவேண்டும். விசாரணை என இந்திய மக்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டாம்.


murthy c k
ஆக 17, 2024 11:56

எனவுண்ட்டர் செய்யவும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ