மேலும் செய்திகள்
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
9 hour(s) ago | 1
வாஷிங்டன் : நம் அண்டை நாடான வங்கதேசத்தின் மைன்சிங்கில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த 29 வயதான தீபு சந்திரதாஸ் என்ற இளைஞரை, அங்குள்ள கும்பல் அடித்து கொன்றது. இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், அமெரிக்க அரசும் இச்சம்பவத்திற்கு தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து, அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'அனைத்து வடிவங்களிலும் உள்ள மத வன்முறையை நிபந்தனையின்றி அமெரிக்கா கண்டிக்கிறது. 'வங்கதேசத்தில் உள்ள அனைத்து சமூக மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய, வங்கதேச இடைக்கால அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்றார்.
9 hour(s) ago | 1