ஐ.நா., பொதுச்சபை புதிய தலைவர்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்.,ல் கூடும். இதன்படி, வரும் செப்.,ல் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனலீனா பேர்பாக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் அவர் இருப்பார்.தற்போது, தலைவர் பொறுப்பில், மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்க் உள்ளார்.