உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்டிராஸ்கான் மீதான வழக்கு தள்ளுபடியாகிறது

ஸ்டிராஸ்கான் மீதான வழக்கு தள்ளுபடியாகிறது

நியூயார்க்: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய முன்னாள் ‌ஐ.எம்.எப்.தலைவர் ஸ்ட்ராஸ்கான் மீதான வழக்கினை கைவிட அரசு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டொமினிக் ஸ்டிராஸ்கான் (63), முன்னாள் ஐ.எம்.எப். அமைப்பின் தலைவராக இருந்தார். கடந்த மே மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த நஃபீஸாடு டைய‌ல்லோ என்ற 32 வயது ஹோட்டல் பணிப்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் வீட்டுக்காவலிலிருந்து ஜாமினில் வெளியே வந்தார். இவர் மீதான வழக்கு நியூயார்க்கின் மன்ஹாட்டன் மாவட்ட கோர்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோர்டில் விசாரணை நடந்தது. இதில் ஸ்டிராஸ்கான் மீதான வழக்கில் துவக்கத்திலிருந்தே அவர் அப்பாவி என்பதே வலியுறுத்தி வந்ததாக அவரது வழக்கறிஞர் வாதாடினார். வழக்கு தொடுத்த பெண் திடீரென வழக்கினை வாபஸ் பெறுவதாக கூறியிருந்தார். இதைத்தொடர்நது மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி ஜெனரல்கள், ஸ்டிராஸ்கான்மீதான வழக்கினை கைவிடுவதாக கூறினர்.எனவே கான் மீதானவழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ