உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரூ.5 கோடி போதை மாத்திரை நைஜீரிய பெண் அதிரடி கைது

ரூ.5 கோடி போதை மாத்திரை நைஜீரிய பெண் அதிரடி கைது

மும்பை: டில்லியில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வரும் பஸ்சில் போதைப்பொருள் கடத்துவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மும்பை அருகே வந்த அந்த பஸ்சை, அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர் உணவு பொட்டலங்கள் மற்றும் பழச்சாறு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்திய, 2.56 கிலோ மெத்ஆம்பெட்டமைன் மற்றும் ரேவ் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும், 544 கிராம் எக்ஸ்டசி போதை மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 5 கோடி ரூபாய். போதை மாத்திரைகளை கடத்திய நைஜீரிய பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை