உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்

நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கி பண மோசடி வழக்கில் நாடு கடத்தப்பட இருக்கும் தொழிலதிபர் நீரவ் மோடியிடம் புதிதாக எந்த விசாரணையும் நடத்தப்பட மாட்டாது என்று பிரிட்டனிடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498.20 கோடி கடனை பெற்று, அதனை திருப்ப செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். பிறகு, சி.பி.ஐ., அளித்த புகாரின் பேரில், கடந்த 2019ம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேண்ட்ஸ்வெர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. நீரவ் மோடியை நாடு கடத்தவும் லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாகக் கூறி, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, நீரவ் மோடி 10 முறை தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, கடந்த மாதம் தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீரவ் மோடி, பிரிட்டன் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்திய விசாரணை அமைப்புகள் விசாரணை என்ற பெயரில் தன்னை சித்ரவதை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இதனால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு வரும் நவம்பர் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகார் தொடர்பாக நீரவ் மோடியிடம் புதிதாக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்றும், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையே தொடரும் என்று இந்தியா தரப்பில் பிரிட்டனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் மும்பையில் உள்ள ஆர்தர் சாலையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார். அண்மையில் பிரிட்டன் அதிகாரிகள் நீரவ் மோடி அடைக்கப்பட இருக்கும் ஜெயிலில் ஆய்வு செய்தனர். இதற்கு முன்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்தும் போது கூட, இதே மாதிரியான உத்தரவாதத்தை இந்தியா அளித்திருந்ததது. அதாவது, தனிமைச் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்றும், சர்வதேச தரத்திலான ஜெயிலில் தான் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
அக் 05, 2025 10:28

அடைக்கலம் தருவது ராஜதந்திர வணிகம். அங்குள்ள அரசியல்வாதிகள் நீதிபதிகளுக்கு கவனிப்பு சென்று சேரும் வரை அடைக்கலம் தொடரும். இப்போ இங்கிலாந்து பொருளாதார மந்த கதியில் இருப்பதால் வேறு வழி?


c.mohanraj raj
அக் 05, 2025 04:46

கடனை கொடுத்தவன் காங்கிரஸ்காரன் தப்ப விட்டவன் காங்கிரஸ்காரன் அவனை நாடு கடத்த முயற்சி செய்வது மோடி ஆனால் பிரிட்டன்காரன் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை விட மறுக்கிறான் திருடர்களுக்கு அடைக்கலமா பிரிட்டன்?


spr
அக் 05, 2025 01:14

இது அவசியமா? பொதுவாக இந்தியாவில், "விசாரணை - நீதிமன்றம் - தீர்ப்பு " என்றாலே வெட்டிச் செலவு என்பதுவும் குற்றவாளிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதுவும் உலகறிந்த உண்மையே காவற்துறை விசாரணை ஒன்றுதான் அவர்களுக்கான குறைந்த பட்ச தண்டனையே இப்போது அதுவும் இல்லை என்றால் எதற்கு இந்த வீண் வேலை. இந்த நாட்டிலிருந்த குற்றவாளிகளே எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை அந்த நிலையில் இந்த உத் தரவாதம் தந்து இவரை அழைத்து வரவேண்டிய அவசியம் என்ன?வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகள் மோடியால் திரும்பி அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள் என்றொரு விளம்பரத்திற்காகவா? "நான் அடிக்கறாப் போல அடிக்கிறேன் நீ அழுகிறாப் போல அழு" என்பதா


ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2025 00:22

பிரச்சினை பண்ணாம இங்க வந்து அந்த ராம் ரகீம் போலி சாமியார் பரோலில் வந்து ஜாலியாக இருப்பதை போல குஜாலாக இருக்க வேண்டியது தானே? நண்பர்களுக்கு 13, 15 லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுத்த வள்ளல் சில ஆயிரம் கோடிகளை அட்ஜஸ்ட் பண்ண மாட்டாரா என்ன?


V Venkatachalam
அக் 04, 2025 20:44

எண்ட் கிடையாது ன்னு சொல்றவனுக்கு எண்ட் பாக்குறதுக்கு முன்னாடியே எண்ட் வந்துடும். இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான். இது உலக வழக்கு.


Narayanan Muthu
அக் 04, 2025 20:10

சிந்துபாத் கதை கூட ஒரு நாள் முடிவுக்கு வரலாம். ஆனால் இதற்கு எண்டே கிடையாது.


Premanathan S
அக் 04, 2025 19:42

எனக்குத் தெரிந்து இவரை பல வருடங்களாக நாடு கடத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் நாட்கள், வருடங்கள்தான் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.


V Venkatachalam
அக் 04, 2025 19:31

ராகுல் கானுக்கு எச்சரிக்கை.‌ மோடி அவர்களுக்கு மோடி என்ற பெயரில் உள்ளவர்கள் எல்லாரும் பிரண்ட்ஸ்.‌ அதனால இந்த நிரவ் ஐயும் வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டார் கொள்ளையடிக்கிறவன்களும் மோடிக்கு பிரண்ட்ஸ். அப்புடீன்னு வாய் கூசாமல் பேசினாரேராகுல். இப்போ அவரை பிடித்து உள்ளே போட முடியாதா?


Ramanujam Veraswamy
அக் 04, 2025 18:55

It is surprising people who looted thousands of crores of rupees in India, starts dictating terms for their return to India and Govt is agreeing to them. A special class prisoners.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2025 00:13

நான் ஏதாவது சொல்லப் போய் அப்புறம் என்னுடைய எம்.பி பதவியை பிடுங்கிடுவாங்க. வோணாம்


Rathna
அக் 04, 2025 18:40

இங்கே வந்து உள்ளே வைத்தாலே போதும். உண்மை எல்லாம் தானாகவே வரும். வர வைக்கப்படும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2025 00:16

உண்மை தான் அப்பட்டமாக தெரிந்தது தானே? ஆட்டையைப் போட்ட பணம் தான் வரணும். அதை பங்கு போட்டதால் தானே லண்டனுக்கு விசா கொடுத்து வழியனுப்பி வெச்சாங்க. இங்க வந்தா பரோல்லே ஜாலியாக காலத்தை ஓட்டிட்டு போகலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை