உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்திய விவகாரம்: அமெரிக்கா மீது பிரேசில் அதிருப்தி

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்திய விவகாரம்: அமெரிக்கா மீது பிரேசில் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மோசமாக நடத்தியதாக பிரேசில் அதிருப்தி தெரிவித்து உள்ளது.அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். இதில், அமெரிக்க விமானம் தரையிறங்குவதற்கு மெக்சிகோ அனுமதி மறுத்தது. இதனையடுத்து அந்த விமானம் கவுதமாலாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அப்படி அழைத்து வரப்பட்டவர்களை கைகளில் விலங்கு போட்டு அழைத்து வரப்பட்டதாக அந்நாடு குற்றம்சாட்டி உள்ளது. பிரேசிலின் மானஸ் நகரில் அந்த விமானம் தரையிறங்கியதும், அந்நாட்டு அதிகாரிகள் கைவிலங்கை அவிழ்க்கும்படி உத்தரவிட்டனர்.விமானத்தில் செல்லும் போது குடிக்க தண்ணீரும், உணவும் தரப்படவில்லை என பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். விமானத்தின் உட்பகுதி சூடாக இருந்ததால் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் கூறினர்.இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பிரேசில் வெளியுறவு அமைச்சகம், இது எங்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் எனவும், இது குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venkatesan Srinivasan
ஜன 27, 2025 23:20

கைது செய்யப்பட்டவர்கள் கை விலங்கு இட்டு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். விமானம் விமானிகள் பாதுகாப்பு கருதி. கைதிகளிடம் பரிவு பாதுகாப்பு குறைபாடு ஆக வாய்ப்பு உள்ளது. கைவிலங்கு காரணமாக உணவு தண்ணீர் வழங்கவில்லை. இதில் என்ன தவறு. செய்தது திருட்டுத்தனம். நம் நாட்டில் இருந்தும் இவ்வாறு கள்ளக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டும். அமெரிக்காவின் செயல் உலகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக அமையக்கூடும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


Barakat Ali
ஜன 27, 2025 09:09

லாத்தீன் அமெரிக்க ஆண்கள் பலர் அமெரிக்காவில் செய்வது போதை பிசினஸ் ..... லாத்தீன் அமெரிக்க பெண்கள் பலர் அங்கே செய்வது ..... ஆமாங்க அதுதான் ..... இப்படிச் செய்து அதிக அளவில் குடியேறியுள்ளனர் .... மல்லூஸ் வடவிந்தியாவிலும், வளைகுடா நாடுகளிலும் செய்வது இரண்டாவதாகச் சொன்ன இதே பிச்சினச்சுதான் ....


Indhuindian
ஜன 27, 2025 07:03

இது என்ன அக்கப்போறா இருக்கு திருட்டு தனமா இன்னொருத்தன் வூட்டுக்குள்ளே பூந்துகிட்டு அப்புறம் அதை அந்த வூட்டுக்காரன் கண்டு புடிச்சு வீட்டை விட்டு விரட்டிவிட்டான்னா அது ஒரு குத்தமா அதுக்கு ஏன் ஆத்திர படனும்


நிக்கோல்தாம்சன்
ஜன 27, 2025 06:54

அப்போ உங்களது மக்களுக்கு சொல்லுங்க சட்டவிரோதம் என்பது எந்த நேரத்திலும் தனது கோரமுகத்தை காட்டும் என்று


M Ramachandran
ஜன 27, 2025 01:45

சட்ட விரோத குடியேற்றம் அந்த நாட்டானுகளுக்கு எவ்வளவு பிரச்னைய்யகலிய்ய உண்டாக்கு கிறது. மம்தா செய்த அயோக்கிய தனத்தால் வங்காள தேசா தீவிர வாதிகாலால் திருப்புர் மக்கள் நிம்மதியில்லாமல் அவஸ்தை படுகிறார்கள்


M Ramachandran
ஜன 27, 2025 01:42

அந்நாட்டிற்கு இருட்டு தனமாகா அனுப்பிய போனது மற்றும் இனித்ததாக. உங்கள் நட்டு பிரஜைகளை வைத்து காப்பாற்ற துப்பில்லாத நீங்க எல்லாம் இனொருவரை குறை சொல்வதற்கு முன் உங்களை திருத்தி ள்ளுஙக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை