உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை: அமெரிக்க அமைச்சர் ரூபியோ தம்பட்டம்

அமெரிக்க அதிபர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை: அமெரிக்க அமைச்சர் ரூபியோ தம்பட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை என காசா போர் அமைதி திட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், காசா போர் அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அதிபர் டிரம்பின் முயற்சிகளை வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ரூபியோ பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்க அதிபரின் ஈடுபாடு இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில், டிரம்ப் ஈடுபட்டதால் மட்டுமே இது சாத்தியம். இது உண்மையில் மிகப்பெரிய திருப்பமாக நான் நினைக்கிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு நினைவில் கொள்ளுங்கள். அப்போது இது சாத்தியம் என்றும் யாரும் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மகத்தான திருப்பு முனை

இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: மத்திய கிழக்கில் ஒரு மகத்தான திருப்பு முனையை அடைந்தோம். இதற்கு ஒரு போது தீர்வு காண முடியாது என மக்கள் கூறிய நிலையில், காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். அங்கு நிலையான அமைதி இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனது பதவிக் காலத்தில் ஏழு போர்களை தீர்த்து வைத்து இருக்கிறேன். நான் ஒரு பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்க போகிறேன். நான் எகிப்து செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். அங்கு ஒரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையொப்பம் ஏற்பட போகிறது. இவ்வாறு டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Easwar Kamal
அக் 10, 2025 18:58

அதெல்லாம் சரி ஜால்ரா இந்திய /பாக்கிஸ்தான் போரை trumpthan நிறுத்தினர் அதை சொல்ல மறந்தாச்சா ? trumpan கோப பட போறாரு. இது எல்லாம் ரூபியோ அடுத்த ஜனாதிபதி போட்டிக்கு தனக்கு ஆதரவு trumpan தருவார் என்று நம்பிக்கை. சொல்லப்போனா j.D. vanez விட ரூபியோ சிறப்பாக செயல் படுகிறார்.


Ganesun Iyer
அக் 10, 2025 18:20

அங்கேயும் ஒரு கல்வி அமைச்சர்...


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2025 14:42

மத்திய கிழக்கு அரபு நாடுகளை முட்டாள்கள் ஆக்கி கொண்டிருப்பதால் இவ்வளவு ஆட்டம் , அவர்களும் ஒருநாள் தூக்கத்தில் இருந்து எழுவார்கள் அப்போது இருக்கு ரூபியோ உங்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்நாள் ,


Barakat Ali
அக் 10, 2025 11:57

அங்கேயும் இருக்குதுங்களே .....பெருமிதம் .......


Anand
அக் 10, 2025 10:28

இப்படி சொன்னால் தான் பதவின்னாய்ங்க.


duruvasar
அக் 10, 2025 08:59

சப்பாதிகேற்ற தோதான


Ramesh Sargam
அக் 10, 2025 08:53

அங்கேயும் திராவிட கலாச்சாரமா? அங்கேயும் அல்லக்கைகளா...? அமெரிக்க மக்களுக்கு பெரிய ஆபத்து.


duruvasar
அக் 10, 2025 08:10

அமெரிக்கா தமிழக அரசியல் கட்சி தலைவர். இந்த ரூபியோ.


duruvasar
அக் 10, 2025 07:50

இதுக்கு ஒரு முடிவேயில்லையா


Haja Kuthubdeen
அக் 10, 2025 07:49

ஓரளவு உண்மைதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை